ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, November 06, 2009மறதி.கார்களுக்கிடையே கடந்து போனவனுக்கு கார்களுக்கிடையே கடக்கும் கர்வம். கார்களுக்கிடையே ஓடிய நாய்க்கு கார்களுக்கிடையே ஓடும் பீதி. கார்களுக்கிடையே பறந்த தட்டானுக்கு கார்களை பற்றிய பிரஞ்ஞையில்லை. தட்டான் குறித்த நம் கற்பிதம், பறப்பதன் அற்புதம், turbulenceஇன் மர்மம், காலங்காலமாக கைமாற்றி காத்து செல்லும் ரகசியம் எது குறித்தும் தட்டானுக்கு பிரஞ்ஞையில்லை. turbulenceஐ முழுசாய் விளக்க நூற்றாண்டாய் தூக்கம் கெட்டவனுக்கு தட்டானைப் போல பறக்க வைக்க தெரியவில்லை. கனவில் தட்டானாய் மாற தெரியாத எனக்கு கார்களுக்கிடையே கடந்து போனவனின் கர்வம் மறக்கவில்லை |
4 Comments:
எனக்குப் பிடித்திருக்கிறது. மேலும் கவிதை எழுதுங்கள் என்று உண்மையாகவே சொல்லத்தக்க வகையில் இருக்கிறது. ஆனால், தட்டானுக்கு சுய பிரக்ஞை கிடையாது என்று என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. கவிதைக்கான உருவகம் என்ற அளவில் சரி. “கார்களுக்கிடையில் கடப்பது” என்பதை இன்னமும் துல்லியமான காட்சிப்படிமமாக எழுதலாம் எனத் தோன்றுகிறது. ஓடும் கார்களா, கடப்பது பக்கவாட்டிலா காரின் முன்னாலா போன்றவை. கூற்றின் தன்னிலை காரோட்டியுடையது என்றுதான் தோன்றுகிறது – அதுவும் பதியப் பட்டிருக்கலாம்.
ராஜன், கருத்துக்கும் ஊக்குவிப்பிற்கும் ரொம்ப நன்றி!
ராஜன் குறையின் விமர்சனத்திற்கு பிறகு ஒருவார்த்தை மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு மீண்டும் நன்றி.
மிகவும் அருமையான பதிவு.
Post a Comment
<< Home