ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, November 11, 2009சுய இன்பம்.எழுதுவதற்காக மட்டுமே எழுதிகொண்டிருக்கும் வரியை எழுதிக் கொண்டிருப்பதை எழுதிகொண்டிருக்கும் போது, விளக்கணைந்து இரவை சல்லாபிப்பதாக கற்பனை செய்து சுய இன்பத்தில் ஆழ்வதாக கற்பனை செய்து பார்தேன். காலம் ஒரு கணம் அசையாதது போல மயக்கம். காலம் அசையாமல் கணமா? சுவர்கள் மூடிக்கொள்ளப் போவதுபோல் நடிக்க, சிறுவயதில் தனித்து நடந்த இரவின் காலடிகளை இங்கிருந்து கேட்கும்போது வரிகள் மட்டுமே நிஜம் போல தோன்றுகிறது. |
5 Comments:
இது போன்ற கவிதைகள் பொதுவாக எனக்குப் புரிவதில்லை, இருந்தும் வாசிக்கையில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது உண்மை
அனுபவிக்கணும், ஆராயக்கூடாதோ ?
கவிதை எனக்கும் புரிய வில்லை.
ஆனால் சுய இன்பம் பத்தி விரிவான பதிவு நீங்கள் எழுதினா நல்ல இருய்க்கும்.
பாலா, குப்பன்,
இந்த பதிவில் உள்ளதை பற்றி பேசவில்லை.
பொதுவாக கவிதை என்பது வாசித்து உடனே அர்த்தம் புரிந்து கொள்வதற்காக அல்ல. அதன் வாசிப்பு அனுபவம்தான் அந்த இடத்தில் முக்கியம். பின்னர் பல கட்டங்களில் புரிதல் என்பது ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம்.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
This poem is so nice.
Thks..
கார்திகேயன் நன்றி!
Post a Comment
<< Home