ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, November 19, 2009கடற்கரை.இரவின் ரத்தச்சோகை நிலவின் குடித்த மப்பு மணற்சாம்பல் அலம்பல் படகின் தனிமை காற்றின் போதை வெளியின் விஷம் வெறுமையின் குற்ற உணர்வு கூட்டத்தின் இசை இரைச்சலின் கரைந்த வண்ணம் இரையும் அலை அமைதி நண்டுகளின் அறவுணர்வு வானின் நிழல் நடுக்கடல் சர்ப்பம் போதையின் வெளிச்சம் உணர்தலின் நடிப்பு நிஜத்தின் மாயம். |
4 Comments:
good one.
வசந்த்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.ஆனால், மப்பு,அலம்பல் என்ற வார்த்தைகள் இக்கவிதையின் போக்கோடு ஒட்டவில்லை. கொச்சையாக இருப்பதாக கருதுகிறேன். மேலும் வானின் நிழல் என்ற பிரயோகம் ( பிரமாதமாக உள்ளது) பிர்மிளின் தாக்கத்தை நினைவூட்டுகிறது.
வாசு
செல்வநாயகி, வாசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிஞரா ஃபார்ம் ஆயிட்டீங்க போல((- வாழ்த்துக்கள். நானும் நமக்குத் தொழில் (இப்போதைக்கு) கவிதை என்று களமிறங்கியாச்சு. மத்த பிளாக் மூடி கவிதை பிளாக் மட்டும் ஓபன்.
midakkumveli.blogspot.com
Post a Comment
<< Home