ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, October 19, 2005

குஷ்புவும் சில அறிஞர்களும்!

அறிஞர் ரவி ஸ்ரினிவாஸ் டென்ஷனில் இருப்பது புரிகிறது. ஆத்திரத்துடன் எழுதிய அவர் பதிவில் பின்னுட்டம் இடப்போனால், அதற்கான கதவு மூடப்பட்டிருப்பது தெரிந்தது. அவர் இப்படி அறிஞர்த்தனமாய் பின்னூட்டக்கதவை அடைப்பார் என்று தெரியாததனால், சில காரணங்களால் எழுதியதை சேமிக்கவும் முடியாமல் தவித்து, பின் என் பதிவில் பின்னூட்டிவிட்டு சென்றேன். தன்னை விம்ர்சித்து இரண்டு பதிவுகள் வந்துவுடனேயே இத்தனை ஆத்திரமும் டென்ஷனும் ஒரு அறிஞருக்கு வந்து செருகிறது. ஆனால் குஷ்பு என்ற பெண்ணை எதிர்த்து தமிழகத்து தெருக்களில் போராட்டமும், நாட்டைவிட்டு வெளியேறச்சொல்லி கோஷமும்,'தற்கொலை செய்துகொண்டதாய்' வதந்தியும் வந்tha பின்பு அந்த பெண் அழுதபடி மன்னிப்பு கேட்டதை அருந்ததியுடனும், பெரியாருடனும் ஒப்பிட்டு விமர்சித்தவர் நம் அறிஞர். இவர் மீது குஷ்பு மீது நடந்தது போன்ற தாக்குதல் நிகழ்தால் எப்படி எதிர்கொள்வார் என்பதை அவரவர் கற்பனைக்கே விடுகிறேன். இனி ரவியின் பதிவில் நான் எழுத நினைத்த பின்னூட்டம் தொடர்கிறது.

அடேங்கப்பா! தமிழ் சினிமாவின் எந்த கோர்ட் சீனும் கிட்ட வரமுடியாது போல தெரிகிறது. 'நான் நிரபராதி', 'நான் அவன் அல்ல' என்பது போல் எத்தனை வசனங்கள்! இதற்கு பதில் நான் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வரிகளில் ஏதேனும் உருப்படியாய் மொட்டையாய் எழுதியிருந்தால் கூட எத்தனை அறிவுபூர்வமாய் இருந்திருக்கும்!

என்றாலும் என்னை 'அற்பன்' என்று சொன்னதற்கு மிகவும் நன்றி. உங்கள் கருத்துக்களை திரித்து உங்களை ஆணாதிக்கவாதி என்று தொடங்கி ஏகப்பட்ட வார்த்தைகளால் அர்சித்திருக்க என்னால் முடியும் என்றாலும், சந்தேகத்தின் பலனை அளித்து 'நட்டு மட்டும் கழண்டு விட்டதாக' சொன்னதை வசை என்று சொன்னவர்களுக்கு, நான் முன்வைத்த விமர்சனத்திகாக அற்பன் என்று சொல்வது எப்படி தெரியும் என்று என்னால் ஊகிக்க முடியாவிட்டாலும், என் பக்கம் கொஞ்சம் நியாயம் சேர்ப்பதற்கு நன்றி.

ஆனாலும் தப்பா நினைச்சுக்காதீங்க ரவி, நீங்க ரொம்ப வளர வேண்டியிருக்கிறது. ஒருவர் சொன்னதை மறுக்க, உமது 'சாதனைகளை பட்டியல்' இடுவதோ, அன்று அதை செய்தேன், இதுவரை இப்படி கிழித்தேன் என்று சொல்வது அல்ல மறுப்பு. சும்மா காக்காய் எச்சம் விடுவது போல் வாக்கியங்களை சகட்டு மேனிக்கு தொடர்பில்லாமல் அடுக்குவது அல்ல. பதில் நேரடியாக விஷயம் குறித்து இருக்க வேண்டும். உதாரணமாய் நீங்கள் இங்கே புலம்புவது போல் என்னிடமோ, சிவக்குமாரிடமோ நீங்கள் கேள்வி எதுவும் கேட்கவில்லை. மேலும் அவர் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்று அல்ல. நீர்தான் அதை கூட்டணி என்று திரிக்கிறீர். நீங்கள் கேட்ட பத்து பைசா பெறாத கேள்விகள் மாலனிடமும், வாசுகி, சரஸ்வதியிடமும்தான் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் கூட அதற்கு நான் பதிஉல் சொல்லியுல்ளேன். நான் உங்கள் மீது வைத்த விமர்சனம் எளிமையானது. குஷ்பு மீதான தாக்குதலை நியாப்படுத்துகிரீர்கள். எப்படி என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்கள் பதிவிலிருந்து மேற்கோள் காட்டியபின் உங்களுக்கு ஆதரவாய் வந்த பெயரிலியும் சுமுவும், கார்திக்கும் கூட பதில் சொல்ல முடியவில்லை. குஷ்பு மீதானா தாக்குதலுக்கு தங்கர் மீது நடந்த விசாரணைதான் காரணம் என்று சொல்லுவது, குஷ்பு மீதானா தாக்குதலை நியாயபடுத்துவது என்று அல்லாமல் வேறு என்ன?

உங்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புக்குரிய(அற்பமாய் கோபப்படுவதில் அர்த்தமில்லை. எல்லாவற்ரையும் தன் நிலையில் வைத்து பார்க்கும் போதுதான் சில நியாயங்கள் சிலருக்கு புரியக்கூடும், அதனால் சொல்கிறேன்) பெண் ஒருவரை, மேலதிகாரி வேலைக்கான சம்பளத்தை கேட்டதற்காக 'விபச்சாரி' என்று திட்டுகிறார். அதை இப்போது தங்கருக்கு நீங்கள் அளிக்கும் சலுகையை போல் அந்த அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாய் பார்ப்பீர்களா? இல்லை நடிகையை பற்றி மட்டும் அப்படி சொல்வது ஒரு தனிப்பட்ட கருத்து, அதை சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு என்று நீங்கள் நினைத்தால் அதற்கான மார்க்சிய விளக்கத்தை தர இயலுமா? அந்த மேலதிகாரி மேல் விசாரணை அது இதென்று நீங்கள் ஆட்டம் ஆடிய பின், சில மாதம் கழித்து உங்களின் அன்புக்குரிய பெண் ஈபிடபிள்யூவில் பாலியல் குறித்து ஒரு கட்டுரை எழுத, அதை தனது அரசியல் பலம் கொண்டு பெரிதாக்கி, அவரை பற்றி தெரிவெங்கும் ஆபாச போஸ்டர் அடிக்க படுகிறது. செருப்பு விளக்கமார் சகிதம் ஊரை விட்டு ஒடிப்போ என்று தெருவில் தர்ணா நடக்கிறது. பத்திரிகைகளில் ஆபாசமாய் திட்டப் பட்டு, ஆதரிக்க ஆளேயில்லை என்று ஒரு நிலைவருகிறது. அம்மணியின் தொழிலும் பாதிக்க கூடும் என்று அஞ்சி மன்னிப்பு கேட்கிறார். அப்போதும் முதலில் நடந்த ச்ம்பவத்திற்கான எதிர்வினைதான் இது என்று கூசாமல் சொல்வீர்களா? மன்னிப்பு கேட்ட உறுதியின்மை குறித்து பேசுவீர்களா? இல்லை இந்த உதாரணம் குஷ்பு உதாரணத்திலிருந்து எப்படி வேறுபடுகிரது என்று விளக்க முடியுமா?நான் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் இப்படி தயா தக்கா என்று குதிக்கவும், குதித்துவிட்டு மனசட்சியே இல்லாமல் அறிவுவிவாதம் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?

நான் உங்கள் கருத்துக்களை ஆரம்ப காலத்திலிருந்து விமர்சித்திருக்கிறேன். பலமுறை ஒரே அரசியல் தளத்தில் இருப்பதால் மௌனமாய் இருந்ததும், அதரவு அளித்ததும் உண்மை. ஆனாலும் பலமுறை உங்கள் பார்வைக்கும் ஜெயமோகனின் பார்வைக்கும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதையும் சொல்லியிருக்கிறேன். இப்போது எந்த தனிப்பட்ட விரொதமும் கிடையாது. ஒரு பெண்மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதால் வந்த கோபம் மட்டுமே உண்டு. எஸ்.வி. ராஜதுரை ஞாநி, ராஜன்குறை, அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் என்று அனைவரும் இதை கண்டித்து குஷ்புவிற்கு பரிந்தே பேசியுள்ளனர். நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்காததால் வந்த கோபத்தை தவிர எனக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

இல்லை குஷ்பு மீதான தாக்குதலை கண்டித்துதான் அந்த பதிவை எழுதினீர்கள் என்றால் அதை கூசாமல் சொல்லி பாருங்கள்."அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். " என்று சொல்வதும், குஷ்புவிற்கு தாலி சென்டிமெண்ட் படங்களில் நடித்ததால் பாலியல் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்றும், அவர் மன்னிப்பு கேட்டதை ஒரு தாக்குதல் நடக்கும்போது குற்ரம் சொல்வதும் நியாயப்படுத்துதல் இல்லை என்ம்றால எப்படி என்று சொல்லி மறுக்க முடியுமா? சும்மா மொட்டையாக 'நான் நியாயப்படுத்தவில்லை' என்றால் அது பதில் ஆகாது. நான் கேட்ட விஷய்ங்கள் இப்படியிருக்க அதை சிவக்குமார் எழுதியதுடன் சேர்த்து காக்க்காய் எச்ச்ங்களாய் போட்டு செல்வதில் என்ன அர்த்தம்?

நீங்கள்தான் சிவக்குமாருடன் பலமுறை குலாவினீர்கள் என்பதும், நான் தொடர்ந்து அவரை எதிர்த்து வருவதையும். இந்த விவகாரத்தில் கூட அவரை ஆதரிக்கவில்லை (அதே நேரம் காரணமில்லாமல் எதிர்க்கவும் முடியாது) மாறாக விம்ர்சனத்துடனேயே எழுதியிருக்கிறேன் என்பதும் மற்றவ்ருக்கு மட்டுமில்லாமல் உமக்கும் புரியும். அப்படியிருக்க நான் கூட்டணி வைத்ததாய் கூசாமால் திரிக்கிறீர்களே, எப்படி அய்யா அறிவார்ந்த விவாதம் சாத்தியமாகும்?

மற்ரவ்ர்களை மீண்டும் மீண்டும் வாய்கிழிய குஷ்பு எழுதியது குறித்து கருத்து சொல்ல கேட்பவர் இன்னமும் குஷ்பு மீது தனக்கு இருக்கும் கடுமையான விமர்ச்யனம் குறித்து வாயையே திறக்கவில்லை. ரவி பதிலளித்துள்ளது போல் திருமா ராமதசின் ஆதரவாளராக அவரை நான் சொல்லவில்லை. கார்திக், பெயரிலி, சுமு நினைத்திருப்பதை போல அவர் அதரவாளர் இல்லை என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். ரவி உண்மையிலேயே குஷ்பு சொன்னதற்கு எதிராக இருப்பதாலும், சினிமாவில் சிகெரெட் குடிப்பதை தடை செய்வதை ஆதரிப்பதாலுமே அவர் திருமா, ராமதாஸ் அதரவு நிலையை எடுக்கிறாரே ஒழிய, எனக்கு இருப்பது போன்ர ஒரு அபிமானம் கூட அவருக்கு கிடையாது என்றுதான் நான் சொன்னேன்.

நான் பதில் சொன்னால் அது மிக நேரடியாக எதிராளியின் ஒவ்வொரு தர்க்கத்தையும் எத்ர்கொண்டு, குறிப்பாய் சங்கடம் தரும் கேள்விகளை எதிர்கொண்டு இருக்கும். உங்கள் பதிவிற்கு பதிலளிக்கும் அளவிற்கு அதில் சத்து எதுவுமே இல்லாவிட்டாலும்,. வேறு காரணக்களுக்காக பதில் எழுதுவேன். இப்போது இவ்வளவுதான் முடியும்.

பின் குறிப்பு: நான் தமிழ்மணம் பதிவுகளை மிக வழமையாய் படிப்பதில்லை. சில பதிவுகள் நீக்கப்பட்டத்தை அறிகிறேன். அது எனக்கு ஒப்புதலில்லை என்பது மட்டுமில்லாமல் அதை நான் எதிர்கிறேன். இப்போது சொல்லப்பட்ட ஒரு காரணத்தை சொல்லியே நாளை என்னையும் தடை செய்ய முடியும் என்பது மட்டும் என் எதிர்பிற்கு காரணமில்லை. காசி கருத்துக்களை செவிமடுப்பாரா என்ரூ தெரியவில்லை. இந்த காரணத்தினால் மட்டும் தமிழ்மனத்திலிருந்து ஒரு எதிர்பாய் விலகும் முடிவை என்னால் எடுக்க முடியவில்லை. வழக்கம் போல் சீரான இணய வசதி வரும்போது என் கருத்துக்களையும், முடிவுகளையும் எழுதுவேன்.

Post a Comment

---------------------------------------

Thursday, October 13, 2005

மேகின்டோஷில் தமிழ்.

மீண்டும் ஒரு உதவி விண்ணப்பம்.

மேகின்டோஷில், யூனிக்ஸில் யூனிகோட் தமிழ் எழுத்துக்கள் ஒன்று தெரிவதில்லை, அல்லது குண்டக்க மண்டக்க தெரிகிறது என்று நினைக்கிறேன். இதை சரி செய்ய முடியும், எ-கலப்பையையும் பயன்படுத்த் முடியும் என்று இகாரஸ் பிரகாஷ் எனக்கு தகவல் சொன்னார். சில கணித மேதைகளை போல, தீர்வு உண்டு, ஆனால் எப்படி தீர்ப்பது என்று தெரியாது என்பதாக அவரளித்த தகவல்கள் இருந்தன. அதனால் இந்த விண்ணப்பம்.

விண்டோஸ் தவிர்த்த மற்ற OSகளில் தமிழ் படிப்பது/எழுதுவது குறித்து தமிழிணையத்தில் எங்காவது விவாதித்து தீர்வு சொல்லப்பட்டிருகிறதா? நண்பர்கள் அது குறித்த தங்கள் அறிவையும், தகவலையும், கருத்துக்களையும் நேரம் இருக்கும் அளவிற்கு பகிர்ந்துகொள்ள முடியுமா? பதிலளிக்க போகும் அனைவருக்கும் நன்றி. என் பிரச்ச்னையை தீர்க்கும் நண்பருக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன். (மேலதிக சமர்ப்பணங்கள் பிர்ச்சனை தீர்ந்த பின்.) மிகவும் நன்றி.

Post a Comment

---------------------------------------

Wednesday, October 12, 2005

பாகிஸ்தான் இந்தியா பூகம்பம்.

இந்திய எல்லையிலும், பாகிஸ்தானிலும் ஏற்பட்ட பூகம்பத்தால் நிகழ்ந்த பேரழிவை அனைவரும் அறிந்திருக்க கூடும். அது குறித்து வலைப்பதிவிலும் யாரேனும் எழுதியிருக்க கூடும். ஆனால் மிக கவனமாய் வலைப்பதிவுகளை வாசிக்காத என் கண்ணில் எதுவும் தென்படவில்லை. நண்பர் மூலம் மின்னஞ்சலில் வந்த உதவிக்கான ஒரு விண்ணப்பதை இங்கே ஆங்கிலத்திலேயே இடுகிறேன். தமிழ்பெயர்க்க என்னால் இப்போது முடியவில்லை. கீழே தரப்படும்முகவரிகள், இதில் ஈடுபட்டுள்ள மக்களும் நிவாரணப் பணியில் தீவிரமான கடப்பாடுடன் ஈடுபடுபவர்கள் என்பதையும், நீங்கள் அனுப்பும் எந்த உதவியும் பணமும் நிச்சயமாய் பாதிக்க பட்டவ்ர்களுக்கு போய் சேரும் என்பதற்கும் என்னால் உத்தரவாதம் தரமுடியும். மேலதிக விவரங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்றாலும், விரும்புபவர்கள் என்னை மின்னஞ்சலில் அணுகினால் பெற்றுத்தர முயலமுடியும். நண்பரின் பெயரையும், மின்னஞ்சல் முகவரியையும் அவரிடம் அனுமதி கேட்காத காரணத்தினால் நீக்கியிருக்கிறேன். நன்றி.

Pakistan-India Earthquake Relief Appeal

As you know a huge earthquake of magnitude 7.6 struck Muzaffarabad
region of Pakistan on 8th October. This earthquake is bigger than the Gujarat
earthquake. A large part of Pakistan and Kashmir was badly affected.
800 people in Kashmir are dead and more than 2400 are injured. Pakistan
has suffered a major loss of life - more than 40000 people have died.
Indian and Pakistan governments are working together to speed up releif
operations. Many more people are injured and still buried under the debris.

We are in touch with a number of groups working on basic relief in both
India and Pakistan. There is a lot of urgent help that is needed by
these organizations. At this point, we are collecting funds from all over
India and releif materials at Delhi. Volunteer doctors and medical supplies
are needed to work in Kashmir. Warm clothing, tents and make-shift shelter
arrangements are also needed urgently.

Because of the transportation problems involved - at this stage - we
are NOT collecting releif materials in Chennai, Mumbai, etc. The relief
materials are being collected **only** at Delhi. Please contact Anuj Grover -
0-98182-48459 - if you want to donate releif materials.

Releif materials will be sent to:

1.Kashmir valley: through the The Servants of the People Society which
is starting relief work in Baramula. Their trucks are leaving from New
Delhi on the 13th. Contact person: Dr Satya Paulji ( 0 98111 12705) or Mani
(011-2642 7650).

2. Pakistan: through the Pakistan-India People's Forum for Peace &
Democracy (PIPFPD) which is collecting releif supplies in Delhi and will be
transporting it to Pakistan.

Apart from releif supplies, we also need a lot of funds. There are
several organizations in both India and Pakistan that we are in touch with who
require financial support for their releif and rehabilitation work. We
have set up a special fund for this purpose in AID-INDIA:
"Indo-Pak Earthquake Releif and Rehabilitation Fund".

We request you to donate generously and also to collect funds from your friends and colleagues for the Earthquake releif.

All donations can be made by cheques payable to "AID-INDIA" (and marked
or
with an attached letter for "Indo-Pak Earthquake Releif"

If you are in Delhi, please make a cheque to "AID-INDIA" and contact
Anuj
Grover: 0-98182-48459

In Bangalore, please make cheque to "AID-INDIA" and contact Aradhana:
0-98455-37269

If you are in Mumbai, please contact T. Shankar: 0-98208-06127

If you are in Chennai or anywhere else, please post your cheques to:

AID-INDIA
New No 34, II Floor, Rathenam Street
Gopalapuram, Chennai - 600086
Phone: 044-28350403, 94440-61033
email: aid.info@gmail.com


Please forward this information to other friends who would be
interested in helping the earthquake victims.

Post a Comment

---------------------------------------

Monday, October 10, 2005

பாசிஸ்டுகளின் தாக்குதல்!

வீட்டையும் நாட்டையும் காலி செய்து வேறு இடத்தில் நிலைகொள்ளும் சிக்கல்களிலும், பாதி நேரம் இணைய இணைப்பு இல்லாததாலும், இருந்த நேரத்திலும் விண்டோஸ் கிடைக்காமல் மேகின்டோஷில் தமிழெழுத்துக்கள் குண்டக்க மண்டக்க தெரிந்ததாலும், மிக முக்கிய்மான மிக அசிங்கமான நிகழ்வுகள் நடந்தேறிய கட்டத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல கூட முடியவில்லை. குரலை ஒலிக்க ஒரு இடம் இருந்தும், ஒரு பெண்ணை தமிழகத்து பாசிஸ்டுகள், அதுவும் தலித் விடுதலை தத்துவத்தை பற்றி நிற்பதாய் பறைசாற்றிக் கொண்டவர்கள் வெறித்தனமாய் ஒரு தாக்குதல் நடத்தும் போது மௌனமாய் இருப்பதை போன்ற போலித்தனம் வேறு இல்லை என்று நினைப்பதால், காலம் கடந்தாலும் குறைந்த பட்சம் என் கண்டனத்தை பதிவு செய்யவாவது இந்த பதிவு. இதில் 'அலுத்து போவது' என்று சொல்லிகொள்வது போன்ற சந்தர்ப்பவாதத்திற்கு இடமேயில்லை. குஜராத் இன அழிப்பு கிட்டதட்ட மூன்றுமாதமாய் தொடர்ந்தது, அது குறித்து ஆயிரம் கட்டுரையாவது வந்திருக்கும். நானே ஒரு ஐம்பதை படித்திருப்பேன். இதனால் அலுத்து போய்விட்டதாக சொல்ல முடியுமா? அதே போலவே வலைப்பதிவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு நைந்து போய்விட்டாலும் குஷ்பு மீதான பாசிஸ்டுகளின் தாக்குதலில் அலுப்பு என்பது ஒரு பிரச்சனை இல்லை.

திருமாவளவனையும் அவர் பின் நிற்கும் கூட்டத்தையும் எந்த சமயத்தில் 'சிவசேனாவிடமிருந்து வேறுபடாதவர்கள் என்று சொன்னேனோ'? உண்மையில் மனதார அப்படி நினைக்கக் கூட இல்லை. 'கற்பு' பற்றி முன்பு திருமா திருவாய் மலர்ந்தருளிய வரிகளை மனதில் வைத்து கொஞ்சம் ஓவராய் சொல்லிவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் நான் சொன்னதை இத்தனை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லைதான்.

ஒழுங்கான இணய இணைப்பு வந்ததும் இது குறித்து விரிவாய் என் கருத்தை எழுத உத்தேசித்துள்ளேன். இப்போதைக்கு மொட்டையாய் திருமாவளவன் ராமதாஸ் தலைமையில் உள்ள பாசிச கூட்டத்தையும், அதை நியாயப்படுத்தும் மற்றவர்களையும், அந்த நியாயப்படுத்துதலை தார்மீகப்படுத்தும் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற நட்டு கழண்டவர்களையும் வன்மையாய் கண்டிக்கிறேன். இங்கே பிரசாரப்படுத்துவது போல் குஷ்புவிற்கு ஆதரவாக பெரிய அளவில் குரல் எழும்பியதாய் தெரியவில்லை. உதாரணமாய் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று 'மும்பை எக்ஸ்பிரசிற்கு' எதிராக நடந்த போராட்டத்திலும், தார் போட்டு ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்திலும் வெகுவாக கிண்டலடிக்கப்பட்டும், வன்முறை கும்ப்லாகவும் சித்தரிக்கப் பட்டது போல், குஷ்புமீதான தாக்குதலை பெரிது படுத்தாததை கவனிக்க வேண்டும். ஞாநியின் கட்டுரையை படித்தேன். அதே போல மாற்று குரல்கள் என்ற (அ. மார்க்ஸ் தொடர்புள்ள) அமைப்பின் துண்டு பிரச்சுரம் ஒன்றை கீழே தருகிறேன்.

கலாச்சார போலீஸ்களை கண்டிக்கிறோம்.

தமிழ் நடிகை குஷ்புவை பிரதான எதிரியாக நிறுத்தி இங்கே ஒரு கலாச்சார வன்முறை அரங்கேறுகிறது. அடித்தள பெண்களை திரட்டி விளக்குமாறு, செருப்பு சகிதம் ஊர்தோறும் போராட்டங்கள் நடத்தப் படுகின்றன. சென்னையில், மதுரையில், திருச்சியில் என அவர் மீது வ்ழக்குகள் போடப்படுகின்றன.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தல் நடத்த இயலாமை, தனியார் துறையில் இட ஒதுகீடு, சுயநிதி கல்லூரி, நிலத்தடி நீரை கொக்கோ கோலாக்காரனுக்கு விற்கும் அநீதிகள் என அடித்தள மக்களை பாதிக்கும் எத்தனையோ பிரccஅனைகள் இருக்க குஷ்புவை எதிர்த்து இவர்கள் களமிறங்கி இருப்பதேன்?

வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுங்கங்கெட்டவர்கள் என்ற் சங்கராச்சாரி சொன்னபோது இன்று தொடப்ப கட்டைகளுடன் புறப்பட்டுள்ள படைகள் அன்று எங்கு போயின?


அப்படி என்ன சொல்லிவிட்டார் குஷ்பு? மாறிவரும் சமூக சூழலில் பெண்களின் பாலியல் நிலையும் மாறிவருவது குறித்து தொடர்ச்சியாக பல சமூகவியல் ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன. cஅமூகவியலாளர்களும் மனோதத்துவவியலாளர்களும் இது குறித்து கருத்துக்கள் சொல்லியுள்ளனர். சென்ற மாதத்தில் மட்டும் இரண்டு பத்திரிகைகளில் (அவுட்லுக், இந்தியா டுடே) இது குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. சீஃபோர் என்கிற ஆய்வு நிறுவனம் உரிய முறையியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி நமது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள திருமணமான பெண்களில் 42 சதவிகிதம் பேர் கணவனை தவிர வேறு ஆடவர்களுடன் உறவு வைத்து கொள்வதற்கு விரும்புவது வெளியாகி உள்ளது.

புதிய சூழலில் பெBகளின் திருமண வயது மிகவும் தள்ளி போகிறது. கால் சென்டர் கணணி தொழில் நுட்பம் போன்ற வேலைகள், ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பு முதலியவை அதிகரிக்கின்றன. விவாகரத்துக்கள் அதிகமாகின்றன. தனியாக வாழும் பெண்களும் எண்ணிக்கையும் ஏறுமுகமாக உள்ளது. இத்தகைய சூழநிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தன்மை தவிர வேறு பல அம்சங்களிலும் பெண்களின் சமூக பாத்திரங்கள் மாறியுள்ளன. தொழில் நிறுவனர்களாகவும், ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் 'எக்ஸிகியூடிவ்'களாகவும் அவர்கள் மாறி வருகின்றனர். பெண்களின் சமூக ஆளுமைகளும் தனித்துவங்களும் பெரிதும் வளர்ந்துள்ளன. இந்த பிண்ணணியில் அவர்களின் பாலியல் விருப்பத்தில் ஏற்படுள்ள மாற்றங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சர்சைக்குள்ளான குஷ்புவின் கட்டுரையை முழுமையாய் வெளியிட்டுள்ளோம். ஒரு தேர்ந்த சமூகவியலாளரை போன்று மிகுந்த பொறுப்புடன் அவர் ஒவ்வொரு வரியையும் கூறியுள்ளார். அவரது கருத்துகளுடன் நாங்கள் நூறு சதவிகிதம் உடன்படுகிறோம். பாலியல் கல்வி, பாதுகாப்பான உடலுறவு, தாம்பத்ய ஜனநாயகம் பாலுறவு ஜனநாயகம் என்று பல தளங்களில் அவரது கருத்துக்களை பதிவு செய்துள்லார்.

இதில் தமிழ் பெண்களை இழிவு படுத்தும் எந்த கருத்தும் கிடையாது. தவிரவும் அதே இதழில் கவிஞர் சுகிர்த ராணியும் இதே போன்ற கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குஷ்பு மட்டும் தனிமை படுத்தப் பட்டு தாக்கப்படுவதேன்?

தங்கர் பச்சான் பெண்களை இழிவு செய்து பேசியதற்கு எதிராக சக நடிகைகள் நடத்திய போராட்டத்தின் எதிர்வினையாகவே இது அமைகிறது. 'ஒரு ஆம்பிளைய மன்னிப்பு கேட்க வச்சீங்களா?' என்ற ஆணாதிக்க திமிரே இந்த போராட்டத்தில் வெளிப்படுகிறது.

இது பெரியார் பிறந்த மண். 'திருமணமான பெண்கள் கனவரை தவிர வேறு ஆடவருடன் உறவு வைத்துகொள்ளுதல் தவறால கருதக் கூடாது' என்று சட்டமியற்ற வேண்டுமென பொது மநாட்டில் தீர்மானம் போட்டவர் அவர். ' ஆண்கள் இரண்டு மனைவியரை வைத்துகொண்டால் பெண்கள் நான்கு ஆசை நாயகர்களை வைத்துகொள்ள வேண்டும்' என மேடைகளில் முழங்கியவர் அவர். இந்த சூழலில் இங்கே ஒரு சிவசேனை கலாசாரம் உருவாவது வருந்தத் தக்கது. பாலதாக்கரேயின் இடத்திற்கு நமது தலைவர்கள் போட்டியிடுவது வேதனைக்குரியது. குஷ்புவை மும்பைக்கு போ எனc சொல்லும் இவர்கள் இந்த கலாச்சார வன்முறை செயல்பாடுகளை மும்பையிலிருந்து இறக்குமதி செய்திருப்பது வேடிக்கையானது.

முஸ்லீம் நடிகைகர்களை ஆதரிக்க வேண்டாம் என்று இந்துத்வவாதிகள் முதன் முதலில் குரல் கொடுத்தனர். அடுத்தபடியாக நமது உள்ளூர் கலாச்சார போலீஸ்கள் இன்று தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டு நடிகைகளை வெளியேற்றுவோம் என முழக்கம் வைக்கின்றனர். தமிழர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வாழும் குஷ்புவை 'அந்நியர்' என் சொல்வதற்கும், சோனியா காந்தியை ஆர். எஸ். எஸ் காரர்கள் 'அந்நியர்' என சொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

கலாச்சார போலீஸ்கள் பொதுவாக சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு ஒரு அளவு உ8ண்டு என்பதுதான். இதே போலிஸ் மொழி இன்று குஷ்புவிற்கு எதிராக பயன்படுத்துவதையும் கவனிக்க வேண்டும். பொடாவையும் தடாவையும் கொண்டுவரும்போது இந்திய உள்துறை அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் பேசிய மொழியில் நமது அடித்தள் இயக்க தலைவர்கள் இன்று மீடியாவில் பேசுவதை கவனியுங்கள்.

மீடியா சாம்ராஜ்ஜியங்களுக்கிடையில் நடக்கும் போட்டியில் இன்று குஷ்பு பலியிடபடுவதையும் கவனிக்க வேண்டும். சன்டீவி தமிழ் முரசு தினகரன் முதலியவை இப்பிரச்சனையில் காட்டும் அக்கறை வணிக நோக்கமும் கொண்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இன்று குஷ்பு தனிமை படுத்தப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நடிகர் சங்கம் கூட விலகியே நிற்கிறது. இந்நிலையில் ஒரு பெண்னை அழ அழ மன்னிப்பு கேட்க செய்தது நமது கலாச்சார போலிஸ்களுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் கருத்துரிமை போராளிகளுக்கும், பெண்ணியவாதிகளுக்கும் இது மிகப் பெரிய தோல்வி.

இச்சூழலில் குஷ்பூவிற்கு ஆதரவாக கருத்துக்களை மீடியாக்களில் முன்வைத்துள்ள பெண்ணுரிமையாளர்களாகிய பேரா. சரஸ்வதி, உ.வாசுகி ஆகியோரை பாரட்டுகிறோம். நமது சூழலில் கருத்துரிமை ஆதரவாளர்களும், பாசிச எதிர்பாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த பச்சை கலாச்சார வன்முறையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

கருத்துரிமை காப்போம்!

கலாச்சார போலிஸ்களின் முயற்ச்சியை முறியடிப்போம்!

குஷ்புவிற்கு தார்மீக ஆதரவை வழங்குவோம்!


(மாற்று குரல்கள்- என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு துண்டு பிரச்சாரத்திலிருந்து மேலே தட்டியுள்ளேன். யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.)

Post a Comment

---------------------------------------
குஷ்பூ எழுதியது.

(இங்கே வலைப்பதிவில் திரிக்கப் பட்டது போல் குஷ்புவின் பேட்டி எதுவும் வெளிவரவில்லை. நான் அறிந்த வரையில் இந்தியா வெளியிட்ட பலருடய கருத்துக்களை திரட்டி வெளியான சர்வே கட்டுரைக்காக, தன்னிடம் கேட்டுகொள்ளப்பட்ட படி ஒரு சிறு கட்டுரையை அவர் எழுதியிருந்தார். அதை ஒரு துண்டு பிரச்சுரத்திலிருந்து கீழே தருகிறேன்- Rosavasanth.)

படித்த எந்த ஆணும் திருமனத்தின் போது மனைவியின் கன்னித்தன்மையை எதிர்பார்க்க மாட்டான்.

குஷ்பு


பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை பெங்களுரை விட பின் தங்கியே இருக்கிறது. இப்போது கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கொதேகளிலும் ஏராலமான பெண்களை பார்க்க முடிகிறது.செக்ஸ் பற்றி பெண்களால் வெளிப்படையாக பேசமுடிகிறது. கட்டு பெட்டித்தனம் நிறைந்த இந்திய சமூகத்தில் பெண் மெல்ல இந்த விஷயத்தில் சிறகடிக்க ஆரம்பிக்கிறாள். ஆனாலும் ஸ்டெஃபானி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் இந்த போக்கு ஆரோக்கியம்தானா என்கிற கேள்வியை எழுபுகிறது. அதே சமயம் பள்ளி கூடங்களில் செக்ஸ் கல்வி மிகவும் அவசியம். பள்ளி கூடங்களில் சொல்லி தரவில்லை என்றாலும் கூட பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படைகளை சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

என்னை பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப் பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய்ஃப்ரண்டை மாற்றிகொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பெண் தனது பாய் ஃப்ரண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிகொ0ண்டே அவனுடன் வெளியே போகலாம். தன் பெண் சீரியஸான உறவை வைத்திருக்கும் போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமுகம் விடுதலை ஆகவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்ய போகிறவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துகொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் பிறந்ததால் எங்கள் பொறுப்புகள் அதிகமாகியிருக்கின்றன. குழந்தைகளும் எங்களுடனேயே தூங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிரது.மனவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உடல்ரீதியாகவும் சந்தோஷமளிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். இருவரும் தங்கள் செக்ஸ் ஆசைகளை பரஸ்பரம் புரிந்துகொண்டால் மணவாழ்வில் பிரச்சனை இருக்காது.

சில தம்பதிகள் செக்ஸ் புத்த்கங்கள் படங்கள் பயன்படுத்தி தாம்பத்திய இன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதே சமயம் இருவருமே ஒருவர் மற்ரவரது விருப்பு வெறுப்புகளையும் சௌகரிய அசௌகரிய்ங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் தமது செக்ஸ் விருப்பங்களை பற்றி பேசினால் அவர்களை தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். செக்ஸிற்கு இரு நபர்களிடைய மன இணக்கம் அவசியம்.

(அவசரமாய் ஒரு சைபர் கபேயில், இதன் அவசியம் கருதி, இகலப்பையின்றி சுரதா உதவியுடன் அடித்து ஒட்டுவதில் வரும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகளுக்கு மன்னிக்கவும்-Rosavasanth)

Post a Comment

---------------------------------------
Site Meter