ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, March 13, 2010

ஜெயமோகனின் உள் (ஒதுக்கீடு) அரசியல்.

ஜெயமோகனின் பழைய பதிவொன்றை கண்டு, புதிதாக தொடங்கியுள்ள குட்டி பதிவுகளில் குறிப்புகளாக எழுத நினைத்தேன். சற்று நீண்டுவிட்டதால் இங்கு இடுகிறேன். விஷயம் பழையதுதான் என்றாலும் அது குறித்த புரிதல் நித்யமாக உதவக்கூடியது. எதிர்வினை என்பதால் ஜெமோவின் பதிவை படித்து விட்டு இந்த பதிவை வாசிக்கலாம்.

அண்மையில் நிறைவேற்றபட்ட மகளிருக்கான இட ஒதுக்கீட்டில், 'உள் ஒதுகீடு கிடைக்க பாடுபாடுவோம்' என்கிறார் திருமா. நம் சமூகத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுவதில் இருக்கும் சிக்கலை கணக்கில் கொண்டு நிறைவேற்றப்படுவது மகளிருக்கான ஒதுக்கீட்டு. இதில் தலித்துக்கான உள் ஒதுக்கீடு கேட்பதை விட, மிகவும் வெளிப்படையான நியாயங்கள் கொண்டது தலித்துக்கான நிலவும் இட ஒதுக்கீட்டில் அருத்ததி சமுதாயத்தினருக்கான உள் ஒதுக்கீடு. அந்த உள் ஒதுக்கிட்டை ஒரு கட்டத்தில் திருமாவும் கிருஷ்ணசாமியும் எதிர்த்தார்கள். அது தன் சாதி சார்ந்த பரப்பிய அரசியல் நிலையின் மேலாதிக்க பார்வையில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு. திருமா பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் உள் ஒதுக்கீட்டின் நியாயத்தை ஒத்துகொண்டு பேசியதை வாசித்தேன். கிருஷ்ணசாமி உள் ஒதுக்கீடு குறித்த, எந்த வித நியாயமும் இல்லாத தன் நிலைப்பாட்டை பரிசீலித்து மாற்றிக்கொண்டாரா என்று நான் அறியேன்.

உள் ஒதுகீடு என்பது தலித்துக்களுக்கான நிலவும் இட ஒதுக்கீட்டீல், தலித்களை சாதிப்படிநிலை சார்ந்து மேலும் சில வகை பிரிவுகளாக பிரித்து, தனியாக அந்த பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்வது. இதற்கான கோரிக்கை ஆந்திராவின் (அருந்ததியினருக்கு சமானமான) மாதிகா சமூகத்தினாரால் எழுப்பப்பட்டு, சந்திரபாபு நாயிடுவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. (தமிழக பறையர்களுக்கு சமானமான) மாலா ஜாதியினரின் தீவிர எதிர்ப்பிலும் வழக்குகளிலும் மாட்டி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அரசு சார்ந்த கமிஷன்களால் இதன் நியாயங்கள் விசாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு குறித்த குரல்கள் 90களிலேயே ஆதி தமிழர் பேரவையால் முன்வைக்கப்பட்டு 2000த்தில் தீவிரமடைகிறது. மதிவண்ணனின் 'உள் ஒதுக்கீடு சில பார்வைகள்' என்ற புத்தகம், ஆந்திர+தமிழக வரலாற்றை சொல்வதாக வெளிவருகிறது. (இன்னும் சில புத்தகங்கள் உண்டு.) தமிழகத்தில் தொடர்ந்து கூட்டங்கள் நடக்கின்றன; மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், பெரியார் திகவும் இதற்கு தொடர்ந்து ஆதரவு தந்து கலந்து கொள்கின்றன. கலைஞர் உள் ஒதுக்கிடு கோரிக்கையை ஏற்பதாக அறிவிக்கிறார்; திருமா, கிருஷ்ணசாமி போன்றவர்கள் எதிர்ப்பு குரலை முன்வைக்கின்றனர். இந்த பிண்ணணியில் ஜெயமோகன் இதை முன்வைத்து எழுதிய பதிவை பார்போம். அதை பற்றி பேசுவதுதான் இந்த பதிவின் நோக்கம்.

நான் ஜெயமோகனின் இந்த பதிவை குறித்து 'ஜெயமோகன் செய்வது அவரது வழக்கமான அசிங்க வேலை' என்று ரொம்ப நாட்கள் முன்பு ட்விட்டரில் எழுதியிருந்தேன். என்னை தொடரும் யாரோ ஒருவர் ஆதாரம் தரமுடியுமா என்று கேட்டிருந்தார். நான் பதில் சொல்லவில்லை. இப்போது ஜெமோவை பதிவை மீண்டும் கண்டு எழுதுகிறேன்.

திராவிட இயக்கம், பெரியார் குறித்து ஜெமோ எழுதியவைகளை வாசித்து, அதில் உள்ள தர்க்க திறமைகளை புரிந்து கொண்டவர்கள், எளிதில் ஜெமோவின் இந்த பதிவின் உள் அரசியலையும் புரிந்து கொள்ளமுடியும். இந்த பதிவில் வெளிப்படும் ஜெமோவின் அரசியல், டோண்டு போன்றவர்கள் முன்வைக்கும் மிக எளிமையான ஒரு ̀சோ'த்தனமான அரசியலை, இன்னும் நளினமான மொழியில், அண்மைக்கால கருத்தியல்களை செரித்து, திறமையாக தர்க்கப்படுத்தி முன்வைக்கிறது. அதாவது தலித்கள் மீதான பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வன்முறைகளை முன்வைத்து தன்னை நியாயப்படுத்தும் பார்பனிய அரசியலை போன்றது. (அவ்வாறு ஜெமோவின் விசிறிகளான சரவணன், சூர்யா போன்றவர்களே, பிற்படுத்தப்பட்டவர்களின் வன்முறையை வைத்தே பலமுறை இணையத்தில் பேசியிருக்கிறார்கள்.) இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் சற்று வசதியான நிலமை; தலித்களில் ஆக கடைசி சாதியினரான அருந்ததியர் மீது மேலாதிக்கமும், நியாயமற்ற தன்மையும் கொண்ட ஆதிக்க தலித் சாதியினரின் முரண்பகை. இதை முன்வைத்து ஜெமோ தன் பதிவில் செய்வது இதுவரை தலித் அரசியல் என்பதாக நிகழ்ந்தவற்றை சாதியரசியல் என்பதாக் சுருக்கி நிராகரிப்பது. இதுவரையான தலித் அரசியலை மதிவண்ணன் போன்றவர்கள் விமர்சித்து வந்ததற்கும், ஜெமோ திருகி விமர்சிப்பத்கும் உள்ள வித்தியாசத்தை வாசித்து தெளியலாம்.

ஜெமோ எழுதும் ஒரு விஷயத்தை கவனிப்போம்

//'மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஏன் குரல் கொடுக்கவேண்டும்? மிக எளிய விடைதான். அருந்ததியர்கள் பெரும்பாலும் அந்தக் கட்சியில்தான் உள்ளனர்.நடைமுறையில் அருந்ததியர் ,காட்டுநாயக்கர் போன்ற மக்களைப்பற்றி பேசும் உரிமை இப்போது இரு தரப்பினருக்கே உள்ளது. ஒன்று, மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி. இரண்டு கிறித்தவ மிஷனரிகள். அவர்களை மதித்து அவர்களுக்காக ஏதேனும் செய்ய முன்வந்தவர்கள் அவர்களே.//

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக சொல்கிறார். சிபிஐ(எம்) குரல் கொடுத்தது நல்ல விஷயம். ஆனால் சிபிஐ(எம்)ற்கு வாக்கரசியல் என்று ஒரு அரசியல் நலன் உண்டு. அப்படி எந்த அரசியல் நலனும் இல்லாமல் பெரியார் திக தீவிர ஆதரவை நடைமுறையிலும், கருத்தியல் ரீதியிலும் அளித்ததை ஜெமோ தவிர்த்து செல்கிறார். அதை குறிப்பிடுவது அவர் குறி வைத்திருக்கும் பெரியாரிய அரசியல் மற்றும் தலித் அரசியலின் நிராகரிப்பு தர்க்கத்திற்கு வலு சேர்க்காது.

உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை தன் பதிவில் முன்வைக்கும் ஜெமோ, இட ஒதுக்கீடு என்பதை பற்றிய தன் கருத்தையே எங்கும் நேரடியான வார்த்தைகளில் பதிவு செய்ததாக எனக்கு தெரியவில்லை. (நான் தவறவிட்டிருக்கும் வாய்ப்புகளும் உண்டு.) ஜெமோவின் பல்லக்கு, ரப்பர் போன்ற படைப்புகளில் இடவொதுக்கீட்டிற்கு எதிரான அரசியல் இருப்பதாகவே கருதப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை பேசாத ஒருவர், உள் ஒதுக்கீட்டின் நியாயத்தை பேசுவது விசித்திரமானது என்றில்லாமல், உள் அரசியல் கொண்டது என்றே கருத இடம் உண்டு. இட ஒதுக்கீட்டை எதிர்த்து இதுவரை வந்துள்ள சாதிய வெறி கொண்ட புனைவுகளை, தர்க்கங்களை, நகைச்சுவைகளை எதிர்த்து தன் குரலை பதிவு செய்யாத ஒருவர், ஆதிக்க சாதி தலித்களின் உள் ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பை முன்வைத்து செய்வது என்ன? இதுவரையான ஒட்டு மொத்த தலித் அரசியல் என்பதையே நிராகரிப்பது. அதை ரொம்ப சாமர்த்தியமாக கோபம் கொண்ட காட்டு நாயக்கர் ஒருவரின் குரலாக, வேதசகாயக்குமாரின் வாதங்களாக, திருமா கிருஷ்ணசாமி போன்ற தலித தலைவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பு, அதை விமர்சிக்கும் குரல்கள் எல்லாவற்றையும் கலந்து கட்டி செய்கிறார். எல்லாவற்றையும் கலந்து கட்டி அவர் செய்வது உள் ஒதிக்கீடு குறித்த நியாயத்தை அல்ல; இதுவரையான தலித் அரசியலின் நியாயத்திற்கான நிராகரிப்பை. ஆனால் அவர் திறமையாக மறைத்து வைப்பது, இதுவரை முன்வைக்கப்பட்ட தலித் அரசியலின் அடுத்த கட்ட பரிணாமமே அருந்ததியினரின் உள் ஒதுக்கீட்டிற்கான குரல் என்பதை.

பார்பனரல்லாத ஆதிக்க சாதியினரின் குரல், பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சி, 80களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் போராட்டம், 90களின் தலித் அரசியல் என்ற வரலாற்று பின்னணியில், அதன் தொடர்சியான பரிணாமமாக, பரவலான ஆதரவுடன் அருந்ததியினரின் உள் ஒதுக்கீட்டிற்கான குரல் எழுகிறது. ஜெமோ இந்த வரலாற்று பின்னணியின் முக்கியத்தை அறியாதவர் அல்ல. அவரது உள் அரசியல் காரணமாக திறமையான வார்த்தைகளை போட்டு தலித் அரசியலையே நிராகரிக்கும் தர்க்கத்தை சமைக்கிறார்.

திருமாவும், கிருஷ்ணசாமியும், ரவிக்குமாரும் பேசும் அதே தலித் அரசியலைத்தான் அடிப்படையில் மதிவண்ணனும், ஆதி தமிழர் பேரவையினரும் பேசுகிறார்கள், முன்வைக்கிறார்கள். ஆனால் திருமாவும், கிருஷ்ணசாமியும் நடைமுறை அரசியலாக முன்வைத்த உள் ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பு என்பது, அவர்கள் செயல்பட்டு வந்த தலித் அரசியல் சட்டகத்திற்கு எதிரானது. மார்சியவாதி மார்சியத்திற்கு எதிராக செய்வது போல், காந்தியவாதி என்று சொல்லும் சிலர் நடைமுறையில் செய்வது போல், ஆன்மீகவாதி மோசடி செய்வது போல், சொல்லுக்கும் செயலுக்கும் முரணான, முன்வைக்கும் அரசியலுக்கு எதிரான ஒரு செயல். அதை முன்வைத்து அரசியலை மறுக்கவியலாது. ஒரு இடத்தில் கூட, தலித் அரசியல் என்பதாக இன்றுவரை முன்வைக்கப்பட்டதற்கு எதிரான ஒரு தர்க்கத்தை ஜெமோ முன்வைக்கவில்லை. மாறாக நடைமுறை யதார்த்தத்தை மட்டும் தனக்கு சாதகமாக்குகிறார்.

கோயம்புத்தூரில் நடந்த உள் ஒதுக்கீட்டு ஆதரவு கூட்டத்திற்கு, ஆந்திராவில் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பிரமாண்டமான எழுச்சிக்கு ஒரு காரணமான பேராசிரியர் முத்தைய்யா வந்திருந்தார். அவருடன் நடந்து கொண்டிருந்த போது மதிவண்ணன் ஒரு தலித் எழுத்தாளரை காட்டி ̀அவர் மாலா(பறையர்)' என்றார். முத்தைய்யாவின் முகம் ஜாக்கிரதை உணர்வு கலந்த ஆச்சர்யத்துடன் மாறியது. நான் உடனே அங்கிருந்த பலரும் பறையர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதையும், மேடையில் இருந்த பெரியார் திகவினர் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் என்பதையும் குறிப்பிட்டேன். ஆந்திராவின் உள் ஒதுக்கீடு கோரிக்கை என்பது தலித்களான மாதிகா மாலா ஜாதியினரிடையே பிளவையும் பகையையும் ஏற்படுத்தியது. அதனால் பறையர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது முத்தையாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் சில எதிர்ப்பு வந்தாலும், பெரியாரிய அரசியல் பேசுபவர்களும், தலித் அரசியல் பேசும் பறையர் இனத்தை சேர்ந்த பலரும் ஆதரிக்கும் நிலைமை இருப்பதை அவரிடம் பின்னர் சொன்னேன். (உதாரணமாக அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா). இது இங்கே பேசப்பட்டு வந்த பெரியாரிய, தலித்திய அரசியலால்தான் சாத்தியமானது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் பரிணாமம் மற்றும் அதற்கான வெளி என்பது பல வரலாற்று காரணங்களை கொண்டது. அந்த வகையில் தமிழகத்தின் இடது சாரி இயக்கம், (எல்லாவகை) திராவிட அரசியல், தலித் அரசியல் அனைத்தும் முக்கியமானவை; திராவிட இயக்கத்தின் வெகுஜன பரவலாக்கம், 90 களில் பேசப்பட்ட தலித் அரசியல், இடது சாரி இயக்கமும் அதன் மனமாற்றங்களும் கலந்துதான் உள் ஒதுக்கீட்டிற்கான அரசியல் ஆதரவை இங்கே உருவாக்குகிறது. அந்த காரணிகளை எதிரிகளாக கற்பித்து மறுக்கும் வேலையைத்தான் ஜெமோவின் பதிவு செய்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் வரலாற்று காரணியாக இருப்பது, பின்னர் எதிரியாகவும் கூடும். அப்போது பழைய காரணத்தை சொல்லி அந்த அரசியலின் இருப்பை நியாயப்படுத்துவது விபரீதமானது. அந்த வகையில் திராவிட அரசியலை, இதுவரை பேசிய தலித் அரசியலை விமர்சிக்க, பரிசீலிக்க, சிலதை நிராகரிக்க தேவை இருக்கலாம். அந்த வகையில் பேச வேண்டிய விஷயங்கள் வேறு. அருந்ததியர்கள் இன்று அந்த குரலை ஒலிக்கிறார்கள். மதிவண்ணன் உள் ஒதுகீடு குறித்த புத்தகத்தை ̀மற்ற தலித்களால் கொல்லப்பட்ட அருந்தியினருக்கு' சமர்பிக்கிறார். ஆனால் ஜெமோ செய்யும் உள் அரசியல் வேறு.

ஜெமோவின் வாதத்தை தலித் அரசியலை முன்னேடுக்கும் யாரும் எடுத்து கொள்ள போவதில்லை. ( ஆனால் ஜெமோ சொன்னதால் வீம்பாக செய்ய வேண்டிய விமர்சனத்தை கூட சிலர் செய்து கொள்ளாமல் போகும் ஆபத்து உண்டு.) அவர்களுக்காக இந்த பதிவை நான் எழுதவில்லை. ஜெமோவிற்கு இணய உலகில் உருப்படியான தர்க்கத்துடன் யாரும் எதிர்வினை செய்ததில்லை என்று சிலர் வருத்தப்படுவதால் என் பங்கிற்கு மட்டுமே இந்த பதிவை எழுதுகிறேன்.

Post a Comment

25 Comments:

Blogger மதி.இண்டியா said...

தலித் அரசியலின் தலைமை பீடங்கள் எல்லாம் செய்வது சுயசாதி அரசியல் , உங்களை போன்ற நான்கு குரல்கள் எபோதுமே உண்டு

அதனால் எல்லோருமே அருந்ததியினருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிறீர்களா என்ன ?

பிற்படுத்தப்பட்டோர் எழுட்ச்சி தலித்களை மேலும் நசுக்கியது , தலித்களின் எழுட்சி அவர்களுக்கும் கீழுள்ளவர்களை நசுக்குகிறது .

மேலும் என்ன ? தமிழ் தேசியம் பேசி அவர்களை பிரித்து எதேனும் பார்பனீயத்தை நுழைத்தால் எல்லாம் சுபம் .

உங்கள் எழுத்துகளில் எங்கேயும் தலித் அரசியலின் தீமையான அருந்திதிய அமுக்கல் குறித்து காணோம் , அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை தரையில் தேய்க்கும் தலித் தலைவர்களுக்கு சாதி கொடுமை பற்றி பேசும் உரிமை உள்ளதா என்ன ?

3/13/2010 1:28 PM  
Blogger ROSAVASANTH said...

இந்த மாதிரியே எல்லோரும் எழுதியதை புரிந்து கொண்டு டாண் டாண்னு கேள்வி கேட்வி கேட்டால் எனக்கு வேலை அதிகம் இருக்காது. ஜெயமோகனின் எழுத்துக்களையும் இந்த மாதிரிதான் வாசிக்கிறீர்களா? உங்களை போன்ற வாசகர்கர்கள் நாலு பேர் மிகவும் தேவை.

3/13/2010 1:57 PM  
Blogger Robin said...

ஜெயமோகனின் எழுத்துகளில் நேர்மை கிடையாது. தந்திரமாக தன்னுடைய hidden agenda வை நுழைத்துவிடுவார்! கொஞ்சம் கவனமாக வாசித்தால் அவருடைய ஒவ்வொரு பதிவிலும் உள்ள முரண்பாடுகளையும் பொய்களையும் கண்டுபிடித்துவிட முடியும்.

3/13/2010 2:00 PM  
Blogger ராம்ஜி_யாஹூ said...

இட ஒதுக்கீடு (உள் ஒதுக்கீடு ) குறித்து உங்களின் ஆலோசனை என்ன:

அறுபது ஒன்பது சதவீதத்திலேயே அருந்ததியினர், சிறு பான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதா.

அல்லது, பட்டியலடிப்பட்ட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதா.

அல்லது அறுபத்தி ஒன்பது சத வீதத்திலேயே ஜாதி வாரியாக உள் ஒதுக்கீடு செய்யலாமா.
Like 5% to Naadar, 5% to Thevar, 5% to mooppanaar, 5% to yaadhav, 5% to chettiyaar,


Madhi India is perfectly right. We are not justifiying parpaneeyam here. but in various levels paarppaneeyam is there.

In Scheduled caste reservation, dalithus domination is there.

In Backward caste reservation, Thevar & naadar's dominations are there over mudhaliyar, mooppanaar, yaadhavar,

3/13/2010 2:07 PM  
Blogger D.R.Ashok said...

@மதி இண்டியா

தலித்துகள் வேறு அருந்தயினர் வேறா..?

அப்படி வேறு வெறு ஆயினும்.. ஒரு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்குவார்களா?

3/13/2010 2:26 PM  
Blogger D.R.Ashok said...

followupkku

3/13/2010 2:27 PM  
Blogger Robin said...

//In Scheduled caste reservation, dalithus domination is there.

In Backward caste reservation, Thevar & naadar's dominations are there over mudhaliyar, mooppanaar, yaadhavar,// முடிஞ்சவரை குழப்பத்த உண்டாக்கி இட ஒதுக்கீடே இல்லாம பண்ணிறனும்! ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுன்னு ஆரம்பிக்க வேண்டியதுதானே. தந்திரங்கள் பலவிதம், அதில் இது ஒரு விதம்.

3/13/2010 2:34 PM  
Blogger ROSAVASANTH said...

என்னிடம் தனிப்பட்ட விஷயங்களில், தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்க விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் எனக்கு எழுதவும். ஒரு வேளை பதில் தரலாம். இங்கே பின்னூட்டத்தில் கேட்காதீர்கள். அதுவும் ஏற்கனவே பலர் கேட்டு பதிலும் சொல்லப்பட்ட முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீர்கள்.

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லமுடியும். அதில் நேரத்தை செலவழிக்க எனக்கு கட்டுபடியாகுமா, தேவையா என்பதை பொறுத்தே அதில் இறங்க முடியும். மேலும் கேள்வி கேட்பவன் கொஞ்சமாவது புத்திசாலியாக, எனக்கு சற்று சவாலாக இருக்கும் கேள்வியை கேட்கவேண்டாமா! சும்மா ஒரு கேள்விகுறி போட்டு ஒரு வாக்கியத்தை முடித்துவிட்டால் அதற்கு பெயர் கேள்வியா?

(ஒரு பின்னூட்டம் இங்கே வெளியிடப்படவில்லை).

3/13/2010 2:47 PM  
Blogger ROSAVASANTH said...

மேலேயுள்ள பின்னூட்டம் வெளியிடப்படாத பின்னூட்டத்துடன் தொடர்புள்ளது. மேலே வெளிவந்துள்ள எவற்றுக்கும் பதில் அல்ல.

3/13/2010 2:49 PM  
Blogger veerapandian said...

That all fine you dirty son of a bitch.You have as much IQ as a half witted buffalo and you have this monumental arrogance.Go and fuck your self bastard.

3/13/2010 2:56 PM  
Blogger மதி.இண்டியா said...

மன்னிச்சுங்கண்ணா , நீங்க ரொம்ப பெரிய அறிவு சீவீங்கறத மற்ந்து உங்ககிட்ட கேள்வி கேட்டுட்டேன் , தப்புதான் , இனி இல்லை ,

@அசோக் , ஆமான்னுதான் நினைக்கிறேன் , எதுக்கும் இந்த ஜீவிகிட்டயே விளக்கமா கேட்டுக்கலாம்.

//முட்டாள்தனமான கேள்விகளை //

இது என்ன விதமான மனநிலை ? உலகிலுள்ள முட்டாள்களை கடைத்தேற்றும் பொறுப்பில் சொல்லப்பட்ட பதில் இல்லையா , நல்லது .

3/13/2010 3:17 PM  
Blogger மதி.இண்டியா said...

//ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுன்னு ஆரம்பிக்க வேண்டியதுதானே//

நல்ல யோசனை , ஜாதிரீதியான ஒதுக்கீட்டில் அந்தந்த ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் , இதுவரை இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிக்காதவர்களுக்கும் முதல் உரிமை ,

அப்படி நிரப்பப் படாவிட்டால் மட்டுமே அதே ஜாதியில் மீதமுள்ளமுள்ளவர்களுக்கு .

இன்று சாப்பிட்டவனை விட நேற்றிலிருந்து பசியாக உள்ளவனுக்கே முன்னுரிமை .

ஆனால் இது நடக்கப் போவதேயில்லை .

3/13/2010 3:24 PM  
Blogger Robin said...

//நல்ல யோசனை , ஜாதிரீதியான ஒதுக்கீட்டில் அந்தந்த ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் , இதுவரை இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிக்காதவர்களுக்கும் முதல் உரிமை , // இது என்னுடைய யோசனை அல்ல. ஏற்கனவே பார்ப்பனர்கள் தெரிவித்த யோசனைதான். இட ஒதுக்கீட்டின் பலனை மேற்சாதியினரும் பெறவேண்டும் என்பதற்காக செய்த தந்திரம்தான் இது. ஒருவர் ஏழை என்ற சான்றிதழை 'எப்படியாவது' பெற்றுவிட்டால் இட ஒதுக்கீடு பெற்றுவிடலாம். பின்வாசல் வழியாக நுழையும் தந்திரம்தான் இது.

//ஆனால் இது நடக்கப் போவதேயில்லை .// கண்டிப்பாக நடக்காது. ஏனென்றால் நாம் வாழ்வது மனு-நீதி கோலோச்சிய காட்டுமிராண்டி காலத்தில் அல்ல.

3/13/2010 4:23 PM  
Blogger ராம்ஜி_யாஹூ said...

hi robin, madhi india

I want to tell is arunthathiyar should get separate % from General % or from back ward classes' %, and not from Scheduled caste's reservation. because sc's reservation % is already very low. This is what Krishnasami & Sivakami (IAS) view too.

3/13/2010 4:41 PM  
Blogger Vilwam said...

What about a quota for christian and muslim arundhathiyars.Why no one seems to care for them?I demand an explanation from Mr Thiruma or atleast from Rosavasanth.

3/13/2010 5:58 PM  
Blogger மதி.இண்டியா said...

////நல்ல யோசனை , ”ஜாதிரீதியான ஒதுக்கீட்டில் அந்தந்த ஜாதியில் பொருளாதாரத்தில்” பின்தங்கியவர்களுக்கும் , இதுவரை இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிக்காதவர்களுக்கும் முதல் உரிமை , //இது என்னுடைய யோசனை அல்ல. ஏற்கனவே பார்ப்பனர்கள் தெரிவித்த யோசனைதான். இட ஒதுக்கீட்டின் பலனை மேற்சாதியினரும் பெறவேண்டும் என்பதற்காக செய்த தந்திரம்தான் இது. ஒருவர் ஏழை என்ற சான்றிதழை 'எப்படியாவது' பெற்றுவிட்டால் இட ஒதுக்கீடு பெற்றுவிடலாம். பின்வாசல் வழியாக நுழையும் தந்திரம்தான் இது.//


கொஞ்சம் தெளிவாக படித்தால் பரவாயில்லை .

நான் சொன்னது மொத்த சமூகத்திலும் பொருளாதார நிலையில் தாழ்ந்தவர்க்கான இடஒதுக்கீடு அல்ல .

இப்போதிருக்கும் முறையிலேயே பொருளாதார நிலையில் தாழ்ந்தவர்க்கான முதல் உரிமை .

=நானும் சொல்லிக்கிறேன் , பார்ப்பனர்கள் ஒழிக=

3/13/2010 7:28 PM  
Blogger kavi said...

ஜெமோ வரலாற்றை திரிப்பவர் என்ற கருத்துக் கொண்ட twitter குறுஞ் செய்தி படித்த உடன் இந்த கட்டுரை மற்றும் ஜெமோவின் வரலாற்றுப் பார்வை ? பற்றிய எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. தி க மற்றும் அதன் முன்னோடியான ஜஸ்டிஸ் கட்சியால் தலித் எழுச்சி என்பது குறைந்த பட்சம் 20 வருடங்களாவது அடக்கி வைக்கப்பட்டது என்னும் கருத்துடையவன் நான்... அதற்கான ஒரு ஆதாரம் தலித் எழுச்சி சாத்தியமானது தலித் வகுப்பை சேர்ந்த தலைவர்களால் மட்டுமே என்பதோடு அல்லாமல் அதை இன்று வரை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பலர் (எல்லோரும் அல்ல) பெரியாரின் வழி நடப்பவர்கள்தான்...உபி ,பீகார் போல தலித் மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களின் அரசியல் அதிகார பங்கு இங்கு நடக்காமல் போனதற்கு காரணம் தி க மற்றும் அதன் வழித்தோன்றிய கட்சிகள்தான்...
இங்கு ஜெமோவின் பார்வை என்பது பெரும்பாலும் சமநிலைப்படுத்துவதாகவே காண்கிறேன் எப்படி ஒரு சமூகத்தின் ஒரு பிரிவினர் அடிமை நிலையிலேயே வைக்கப்பட்டு அதன் காரணமானவரகளால் சமூக நீதி அடைந்து விட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டு அனவைராலும் நம்பவைக்கப்பட்டதோ அதற்க்கு ஒரு எதிர்வினை வேண்டுமல்லவா?...மற்றபடி ஜெமோ வரலாறு தானாகவே உருவாகும் (அதன் போக்கில் குறைகளை களைந்து) என்ற நம்பிக்கை உள்ளவர் போலதான் தோன்றுகிறது... ஒரு சிலர் போல பழமையை அதற்காகவே ஆதரிக்கும் தன்மையை அவரிடம் காணவில்லை...அதற்காக அவரின் உரையாடல்களில் அரசியல் கலப்பு இல்லை என்றும் கூற மாட்டேன்..

3/14/2010 5:10 AM  
Blogger ROSAVASANTH said...

உருப்படியான ஒரு பின்னூட்டமாவது வர வழி செய்ததற்கு நன்றி. நாளை வந்து எனது பதிலை சொல்கிறேன். இப்போ நல்லிரவு.

3/14/2010 5:17 AM  
Blogger veerapandian said...

//உருப்படியான ஒரு பின்னூட்டமாவது வர வழி செய்ததற்கு நன்றி. நாளை வந்து எனது பதிலை சொல்கி//

What a third rate arrogant, son of a bitch you are ,indulging in such cheap mental masturbation?You must be the gods curse to your family.

3/14/2010 12:51 PM  
Blogger ROSAVASANTH said...

//What about a quota for christian and muslim arundhathiyars.Why no one seems to care for them?//

அருந்ததியர்கள் மட்டுமின்றி , எல்லா (இந்து மதமல்லாத) மற்ற மத தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அது குறித்த ஒதுக்கீடு உள் ஒதுக்கீட்டிற்கு என் ஆதரவு உண்டு. என் ஆதரவு எந்த விதத்திலாவது பயன்படும் என்றால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

3/14/2010 2:00 PM  
Blogger ROSAVASANTH said...

ஒரு இழி பிறவி இந்த பதிவில் தொடர்ந்து பின்னூட்டமிடுவதை மேலே கவனிக்கலாம். (இழிந்த பிறவி என்றால் பாலியல் தொழிலாளியின் மகன் என்று அர்த்தம் செய்துகொள்கிறார்கள்; கொஞ்ச நாட்கள் முன்பு நான் ஒருவரை இவ்வாறு சொன்னதை அவ்வாறு இன்னொருவர் பொருள் கொண்டார். அந்த பொருளில் நான் சொல்லவில்லை. பாலியல் தொழிலாளியின் மகனாய் இருப்பது என் பார்வையில் இழிந்ததும் அல்ல; ஒரு கீழான உயிரினம் என்கிற பொருளில்தான் தொடர்ந்து பயன்படுத்து வருகிறேன். )

வீரபாண்டி என்ற பெயரில் வருபவரை son of a bitch, bastard என்று யாராவது திட்டினால் ரொம்ப கோபம் வரும் என்று தெரிகிறது. அதனால் எனக்கும் அதே கோபம் வரும் என்று எதிர்பார்க்கிறார். என் பிறப்பு அப்படி இருந்தாலே எனக்கு பிரச்சனயில்லை, இல்லாத போது கோபம் எப்படி வரமுடியும்? ஒரு சாம்பிளுக்காக -ஒரு வகையில் எதிர்கால தர்க்கத்திற்கு பயன்படுத்தும் சுயநலத்துடன் -சிலவற்றை அனுமத்தித்துள்ளேன். அன்பர் இதற்கு மேலும் செய்யும் தொந்தரவு பின்னூட்டங்களை நான் வாசிக்காமலேயே நீக்கி விடுவேன். வாசிக்காத போது கெட்ட வார்த்தைகளால் திட்டுவதால் எந்த பயனும் இருக்காது என்று அந்த முட்டாள் பிறவிக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது.

நான் பொதுவாக என் மீதான வசை எல்லாவற்றையும் அனுமதிப்பதுண்டு. இனி அறிவு பூர்வமான விவாதம் தவிர வேறு அசிங்கங்களை ஜனநாயகம் என்ற காரணத்திற்காக அனுமதிப்பதில்லை என்று நினைப்பதால், இனி இந்த மலப்புழுக்களின் பின்னூட்டங்கள் அனுமதிக்க படாது.

3/14/2010 2:18 PM  
Blogger Vilwam said...

ஐயா, அம்பேத்கார் அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் அநேக தலித்கள் புத்திஸ்ட்களாக மாறினர் என்று லேள்விப்பட்டிருக்கிறேன்,.தமிழ் நாட்டிலும் தலித்துக்கள் புத்திஸ்ட்களாக மாறியுள்ளனரா அல்லது கிறித்துவம்,இச்லாம் மார்க்கங்களூகு மட்டும் மாறினரா?

3/14/2010 10:41 PM  
Blogger ROSAVASANTH said...

குறிப்பிட்ட அளவில் மாற்றியிருக்கிறார்கள். பலர் தங்களை சாக்கியர்களாகவும் கருது கின்றனர்.

3/14/2010 11:13 PM  
Blogger Vilwam said...

ஐயா, தமிழ் நாட்டில் நடந்தது போல் ,ஸ்ரீலங்காவிலும் தமிழ் பேசும் தலித்துக்கள் புத்ததுக்கு மத மாற்றம் செய்துள்ளனரா?அப்படியனால் சிங்கள புத்திஸ்ட்டுக்கள் அவர்களை எப்படி பார்க்கின்றன்ர்?அவர்களும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் போல் தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்களா?ஸ்ரீலங்காவிலும் இட ஒத்துக்கீட்டு சட்டம் அமல் படுத்தப்படுள்ளதா?

3/15/2010 12:18 PM  
Blogger ROSAVASANTH said...

தகவல்களை பொறுத்தவரை, கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள நான் சரியான நபர் கிடையாது. ஆனாலும் என்னிடம் கேட்டுள்ளதால் எனக்கு தெரிந்த பதில்கள் கீழே.

// தமிழ் நாட்டில் நடந்தது போல் ,ஸ்ரீலங்காவிலும் தமிழ் பேசும் தலித்துக்கள் புத்ததுக்கு மத மாற்றம் செய்துள்ளனரா?//

இந்தியாவில் அம்பேத்கார் பாதிப்பில் நடந்தது போல் ஒரு மதமற்றம் -குறிப்பாக தலித்களின் மதமாற்றம் நடந்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் பௌத்தர்கள் சிலர் உண்டு. மிக மிக குறைவாக இருக்க கூடும் என்பது என் நினைப்பு. தமிழ் சேவை வனொலியில் பேசிய ஒருவரை கேட்டுள்ளேன்.

//அப்படியனால் சிங்கள புத்திஸ்ட்டுக்கள் அவர்களை எப்படி பார்க்கின்றன்ர்?அவர்களும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் போல் தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்களா?//

பதில் சொல்லும் அளவிற்கு எனக்கு இது குறித்து விரிவாக எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

//ஸ்ரீலங்காவிலும் இட ஒத்துக்கீட்டு சட்டம் அமல் படுத்தப்படுள்ளதா?//

இல்லை. அதற்கான போராட்டமோ முயற்சியோ கூட கவனம் கொள்ளும் வகையில் நடந்ததாக தெரியவில்லை.

3/15/2010 12:58 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter