ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, January 06, 2010

அரசியலின் வன்மமும், வன்மத்தின் அரசியலும்.

லீனா மணிமேகலை இயக்கும்   ̀செங்கடல்' படப்பிடிப்பின் போது நடந்ததாக தினத்தந்தி அளித்த செய்தியை முன்வைத்து எழுதப்பட்ட இரண்டு பதிவுகள் காண கிடைத்தது. அரசியல்களை தாண்டி தமிழ் சூழலுக்கே உரித்தான அதீதமான வன்மத்தையே அதில் நான் காண்கிறேன். ஒரு செய்தியின் நம்பகத்தன்மை, செய்தி அளிக்கப்படும் முறை,  செய்தியில் சொல்லப்படாத விஷயங்களான சம்பவங்களின் பிண்ணனி போன்றவை குறித்த எந்த கேள்விகளும் இல்லாத பொதுபுத்தி, இந்த வன்மம் தன்னை தர்க்கப்படுத்தி கொள்வதற்கான அடித்தளமாக இருப்பதாக தோன்றுகிறது.  


தினத்தந்தியில் வரும் செய்திகளின் நம்பகதன்மை நம் அனைவருக்கும் தெரியும். ஷோபா சக்தி, லீனா மணிமேகலை இருவரும் இணையத்தில் பதிவு வைத்திருக்கிறார்கள். இருவரும்  இன்னமும் தங்கள் தரப்பை எங்கும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தரப்பை அறியும் பொறுமை கூட இல்லை. ஒரு சிக்கலில் அவர்கள் மாட்டிகொண்ட செய்தி கிடைத்த மறு கணம் அதை தங்கள் அரசியல் வன்மங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் அவசரம் மட்டுமே எனக்கு தெரிகிறது. இதற்கான முதல் உதாரணம் 'இனியொரு' வெளியிட்ட செய்தி மொழியின் தொனி.  வன்முறை மிகுந்த அடுத்தக்கட்ட வக்கிர ஆபாசத்திற்கு வினவு இட்டு செல்கிறது.  இன்னொரு பக்கத்தை அறியும் பொறுமையோ காத்திருந்தலோ எதுவும் வினவுக்கு தேவை இல்லை. பரபரப்புக்காக மட்டும் எழுதப்படும் ஜனரஞ்சக பத்திரிகை செய்திபோல் பதிவு வெளிபடுகிறது. வசைவதன் மூலம் எழுதுபவர் அடையும் உவகை வெளிப்படையாக தெரியும் ஒரு மொழியில் பதிவு எழுதப்பட்டுள்ளதை எளிதில் புரிந்து கொள்ளலாம். . 


வன்மம், ஆணாதிக்க வக்கிரம் எல்லாம் கலந்து, லீனா மணிமேகலை மீதான அப்பட்டமான ஆண் வெறி தாக்குதலுக்கான எல்லா சொற்களாலும் எழுதப்பட்ட பதிவுக்கு கீழே நான் மரியாதை வைத்திருந்த டாக்டர். ருத்ரன் பின்னூட்டமிடுகிறார், "ஆனாலும் பெண்கள் எழுதவேண்டும் என்பதற்கான எதிர்ப்பாக இதை யாரும் திசைதிருப்பாமல் இருக்க வேண்டும்".

தீப்பொறி ஆறுமுகம் ஜெயலலிதாவை மேடையில் திட்டியதை விட  (கடைசி பாராவை படியுங்கள்) மோசமான பாணியில் எழுதப்பட்டுள்ள பதிவை  பெண் எழுத்துக்கு எதிரானது என்று யாராவது திரித்துவிட போகிறார்களே என்று உளவியல் டாக்டருக்கு கவலையாயிருக்கிறது. இந்த பதிவு  பின்னுள்ள உளவியலை கூட புரிந்து கொள்ள முடியாத அறிவு நிலையிலா இவர் இருக்கிறார். அந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்கள், அதன் பின்னான மதிப்பிடுகள் இவற்றுடன் ருத்ரன் ஒத்துபோகிறாரா என்று சொல்ல வேண்டும்.  இதையெல்லாம் என்னால் உண்மையிலே புரிந்து கொள்ள முடியவில்லை. பொதுப்புத்தி என்பது இவ்வளவு மோசமாகவா அறிஞர், முதிர்ந்தவர் என்று நாம் நினைக்க கூடியவர்களின் அறிவை மழுங்கடிக்க கூடியது?



  ̀செங்கடல்' திரைப்படம் வினவு யாரிடமோ  ̀கேள்விப்பட்டு' எழுதுவதாக சொல்வது போல் ஒரு புலி எதிர்ப்பு திரைப்படம் கிடையாது. முதலில் இவர்கள் கற்பனை செய்தோ, கேள்விப்பட்டோ முன்வைப்பது போல ஆவணப்படம் கிடையாது, feature film எனப்படும்  முழுநீள திரைப்படம். கதையாக இருக்கும் சம்பவங்கள் தவிர்த்து, படத்தில் அரசியலாக வருவது தமிழக மீனவர்கள் மீதான சிங்கள் ராணுவத்தின் அராஜகம், இந்திய கடற்படையின் கண்டுகொள்ளாமை, இந்திய அரசின் உதாசீனம். புலிகள்தான் ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்சனைக்கான காரணம் என்று அதில் எந்த தொனியும் கிடையாது. ஒரு திரைப்படத்தின் அரசியல் நோக்கமாக நாம் ஒன்றை விமர்சனமாக வைக்க வேண்டுமானால் ஆக குறைந்த பட்சமாக அதை கண்ணால் பார்க்கவாவது செய்ய வேண்டும். அல்லது முன்படிவம், கதை சுருக்கம் என்று எதையாவது கேட்டிருக்கவாவது வேண்டும். வினவில் எழுத இது எதுவும் தேவையில்லை. ஆதாரம் என்று தான் கேள்விப்பட்டதாக பதிவில் சும்மா எழுதினால் போதுமானது. இவர்கள் கையில் அதிகாரம் வந்தால் என்ன மாதிரி நியாயத்துடன் விசாரணை நடத்தி தண்டனை தருவார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  


படத்தின் திரைகதையை நான் அறிந்தவரையில், இந்த திரைப்படம் சென்சாரால் அனுமதிக்கபடுமா என்பதே எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது. சிங்கள ராணுவம் நடத்தும் அராஜகம், அதற்கு இந்தியா உடந்தையாய் இருப்பதாக வரும் சித்தரிப்பினாலேயே எனக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. இப்படி இருக்க இதை ஒரு புலி எதிர்ப்பு படம் என்று வினவு எழுத்தாளர் அப்பட்டமாக திரிக்கிறார். கேள்விபட்டேன், நம்புகிறேன் என்று வாயால் சும்மா எழுதினால் அது இவர்களுக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. ஒரு வேளை  திரைக்கதை நான் சொல்வது போல் இருந்து, வினவு சொல்வது பொய்யாக இருந்தால் இவர்கள் பகீரங்க மன்னிப்பு கேட்பார்களா?


நான் நேரடியாக அறிந்தவரை மிகுந்த பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த படத்தை அவர்கள் எடுத்து வருகிறார்கள். பணரீதியான பிரச்சனைகள், வேலை செய்தவர்கள் செய்த துரோகம், அலைக்கழிப்புகள், கழண்டு கொள்ளுதல்கள் என்று அவர்கள் தங்கள் அனுபவங்களாக தொகுத்து அளித்தால் மட்டுமே வெளியில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு நடுவில் படப்படிப்பை நடத்தி வருகிறார்கள். இணையத்தில் ஒரு பதிவு எழுதும் வெற்று புரட்சியின் மூலம் அந்த உழைப்பையும் போராட்டத்தையும் இவர்கள் கொச்சைபடுத்துகிறார்கள். 


இந்த படத்தின் மூலம் பணம் சம்பாதிக்கப்போவதில்லை. முடியவும் முடியாது. அதற்கான ஜனரஞ்சகதன்மையும் படத்தில் கிடையாது. அதை விட முக்கியம் படத்தில் வெளிப்படும் அரசியல். கேள்வி கேட்பார் இன்றி இருக்கும் தமிழ் மீனவர்களின் வாழ்க்கை மீதான இரண்டு அரசு மற்றும் அதன் கப்பல் படைகள் நடத்தும் வன்முறை பதிவாகிறது. இதை விட இந்த படத்தை ஆதரிக்க வேறு என்ன காரணம் வேண்டும்? நியாயமாய்  'இனியொரு'வும், வினவும் தங்கள் அரசியல் நிலைபாடுகளின்படி ஆதரிக்க வேண்டிய ஒரு விஷயத்தை, அதுவும்  மிகுந்த இடர்களுக்கு இடையில் நடைபெறுவதை, தங்கள் வன்மத்தின் அரசியல் காரணமாக மட்டும் மகா சந்தோஷத்துடன் கேவலப்படுத்துகிறார்கள். இதில் வினவு பதிவு எவ்வளவு கேவலமான ஆணாதிக்க மொழியில் வெளிப்பட்டுள்ளது என்பதையும்,  வேறு இடங்களில் இவர்கள் ஆணாதிக்கத்தை எதிர்க்க தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நல்லவேளையாய் இவர்கள் அதிகாரத்தை கைகொள்ளும் சாத்தியம் இல்லை. இருந்தால் இருந்தால்  'மன்மதன்'  படத்தில் சிம்பு செய்ததை பொது தண்டனையாக மாற்றியிருப்பார்கள். 



இந்த சம்பவங்கள் குறித்து நேரடியாக விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்ள என்னால் இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் சோபாசக்தியுடன் பேசுவதில்லை. ஏற்கனவே அறிந்திருந்த நிலவரத்தை முன்வைத்தும், விசாரித்து அறிந்த வரையிலும் பணம் தயாரிப்பாளர்களிடம் சரியான நேரத்தில் வந்து சேராததால் வந்த பிரச்சனையாகவே எனக்கு இந்த செய்தியின் பின்னால் இருக்கும் சம்பவங்கள் தெரிகிறது. அதை பணி புரிந்த நபர் பெரும் பிரச்சனையாக்கியதும், பிரச்சனை குறித்த பதட்டங்களும், பத்திரிகைக்கு செய்தி அளித்ததும் செய்தியின் பிண்ணணியாக கேள்விப்படுகிறேன். எந்த விதத்திலும் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்காமல் ஏமாற்றும் கயமைத்தனம் கொண்டவர்களாக லீனாவும், ஷோபா சக்தியும் இல்லை என்று நான் நன்கு அறிவேன். என்  நம்பகதன்மை என் பதிவுகளின் மொழியில் தெரியும். இந்த நம்பகதன்மையை விட தினத்தந்தி செய்தியை (உண்மையாகவோ, தங்கள் வசதிக்காகவோ) நம்புபவர்களுக்காக நான் இந்த பதிவை எழுதவில்லை. 



நான் சோபசக்தியின் நண்பனாக இந்த பதிவை எழுதவில்லை. அவர் இப்போது என் நண்பனும் இல்லை. அரசியல்ரீதியாக அவர் மீது எனக்கிருக்கும் விமர்சனங்களை இங்கே உள்ளடக்கவில்லை.


பின்குறிப்பு: வினவின் பதிவிலும் சரி, பின்னூட்டங்களிலும் லீனா மணிமேகலையை  மிக மோசமாக தாக்கி ஆணாதிக்க திமிருடன் வெளிவந்த கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இணையப்போலிகள் அனானியாய் இடும் தாக்குதல்களை விட கேவலாமான அந்த எழுத்தை தர்க்கரீதியாக விமர்சிக்க நான் தயராகயில்லை. 


அரசியல்ரீதியாக, கருத்துரீதியாக எழுதப்படும் பின்னூட்டங்கள் இங்கே வெளியிடப்படும். தனிப்பட்ட தாக்குதல்கள் குறிப்பாக ஆண் திமிர் கொண்ட தாக்குதல்கள் வெளியிடப்படாது. ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை வெளியிடுவதா வேண்டாமா என்பதை பற்றி நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. உங்கள் உழைப்பு வீணாகக் கூடிய சாத்தியத்தை கணக்கில் கொண்டு அத்தகைய பின்னூட்டங்களை இடுங்கள்.




Post a Comment

46 Comments:

Blogger Ayyanar Viswanath said...

தொடர்புடைய வினவின் பதிவிலிருந்த குரூரம் கண்டிக்க வேண்டியது. லீனாவை விமர்சிக்க அவரின் கணவர் சொந்த வாழ்வு இதையெல்லாம் இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்மய்ய மனதின் பதட்டங்களாகவும் வன்மமாகவும்தான் அப்பதிவிருந்தது.

1/07/2010 12:01 AM  
Blogger selventhiran said...

ஆணாதிக்க மனோபாவத்தின் உச்ச ஸ்தாயில் எழுதப்பட்ட வினவின் அக்கட்டுரை முழுக்க முழுக்க பிழையான தகவல்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையிலான தகவல்கள் என்று சொல்லப்படும் விஷக்கத்திகளாலும் எழுதப்பட்டிருக்கின்றன. வினவின் பெரும்பாலான கட்டுரைகள் இந்த த்வனியில் அமைந்தவைதான். அதனால் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், அறிவார்ந்த தளங்களில் இயங்குவதாக நான் நம்பிக்கொண்டிருந்த டாக்டர் ருத்ரன் போன்றவர்களின் பின்னூட்டங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. வினவில் தொடர் வந்ததற்கான முறைவாசல் அடிப்படையில் இடப்பட்டதாக இருக்கலாம்.

லீனாவின் இரண்டு கவிதைகள் குறித்து அரசியல் ரீதியாகவோ, இலக்கிய ரீதியாகவோ விவாதிப்பதை விட்டுவிட்டு லீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவதே பதிவின் நோக்கமாகப் படுகிறது.

லீனாவின் அந்த இரண்டு கவிதைகளும் “மணல் வீடு” இதழில் வெளியான பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒரு தகவலாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

1/07/2010 12:08 AM  
Blogger Jayaprakash Sampath said...

வினவு கிட்டேயிருந்து இவ்ளோ கீழ்த்தரமான பதிவை நான் எதிர்பார்க்கவேயில்லை.

1/07/2010 12:12 AM  
Blogger ROSAVASANTH said...

சோபா சக்திக்கும் எனக்குமான தனிப்பட்ட உறவு குறித்து எழுதிய இரு வரிகளை யோசனைக்கு பின் நீக்கியிருக்கிறேன்.

1/07/2010 12:30 AM  
Blogger SnackDragon said...

//கேள்வி கேட்பார் இன்றி இருக்கும் தமிழ் மீனவர்களின் வாழ்க்கை மீதான இரண்டு அரசு மற்றும் அதன் கப்பல் படைகள் நடத்தும் வன்முறை பதிவாகிறது. இதை விட இந்த படத்தை ஆதரிக்க வேறு என்ன காரணம் வேண்டும்?//

சமீபத்தில் "தம்பியுடையான்" என்ற படத்தை பார்த்த போது இப்படித்தான் உணர்ந்தேன். விவாசயிகளின் வறுமை பற்றியது, தமிழக அரசியல்வாதிகளில் அக்கறையின்மை மற்றும் அறிவில்லாமை பற்றிய படம்.

சம்பந்த பட்ட பதிவுகளை வாசிக்கவில்லை, வாசித்து கருத்தேது இருந்தால் எழுதுகிறேன்.

1/07/2010 1:52 AM  
Blogger காட்டாமணக்கு said...

வினவின் கட்டுரைகளை விரும்பி படிக்கும் வாசகன் என்றளவில் இந்தக் கட்டுரையை மிகப் பெரிய சறுக்கலாக பார்க்கிறேன். லீனாவின் கவிதை மீது அவர்களுக்கு விமர்சனம் இருந்திருக்கலாம். எதுவும் இங்கே விமர்சிக்கப்பட வேண்டியதே. விமர்சனம் என்னும் பொழுது ஒருவரின் முரண்களை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே வினவு எழுத முயன்ற லீனாவின் விமர்சனம் நியாயமானதே. ஆனால் அதனை கையாண்ட மொழி மீது தான் எமக்கு பெருத்த விமர்சனம் உள்ளது.

வினவின் பதிவை கண்டிக்கிற அதே நேரத்தில் லீனா ஏன் பாரதிராஜாவையும், சேரனையும் விமர்சிக்க வில்லை என்ற கேள்வியில் உள்ள நியாயங்களை வினவு தொடுத்த தாக்குதலை கொண்டு மட்டும் புறந்தள்ளி விட முடியாது. (என்னுடைய இந்தக் கேள்வி சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படும் என நம்புகிறேன்)

அது போல சோனியாவையும், ராஜபக்சேவையும் விமர்சிக்காமல் ஈழப் போராட்டத்திற்கு என்ன போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நியாயமானதே.

பொதுவாக வினவு நண்பர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடும் குணம் பெற்றவர்கள். அந்த வகையில் உழைக்கும் வர்க்கத்திற்காக போராடுகிறேன் என்று கூறி விட்டு போலியாக தங்களை கட்டமைத்துக் கொள்பவர்களை எப்பொழுதுமே கடுமையாக விமர்சிக்கும் குணம் கொண்டவர்கள். அந்த வகையில் தான் இந்த விமர்சனமும் வெளிப்பட்டிருக்கிறது.

பொதுவாக பெண்களை விமர்சிக்கும் பொழுது மொழியில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. வினவு அதனை செய்ய தவறி விட்டது மட்டுமில்லாமல் லீனாவை வேறு கோணத்தில் கைக்காட்ட முயன்று விட்டதாக தோற்றத்தை கட்டுரை ஏற்படுத்துகிறது. வினவு இது குறித்து விளக்கம் அளிப்பார்கள் என நம்புகிறேன்

நன்றி

1/07/2010 4:46 AM  
Blogger SnackDragon said...

வினவின் மொழி தகாததாகத்தான் படுகிறது. லீனாவிடம் அரசியல் இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி "உரிய" மொழியில் உரையாடுவதில் எனக்கு உடன் பாடுஉண்டு. "திரைப்படம் புலி எதிர்ப்பு பற்றியது " என்ற வினவு தன் தரத்தை இழந்து இட்டுகட்டி எழுத வேண்டிய அவசிய அரசியல் என்ன என்று தெரியவில்லை. :( லீனா இடத்தில் "XYZ" இருந்தால் , அவரது அரசியல் பேசப்படவேண்டியது என்பதிலும் கூட, அவர் தனது எந்த மொழியிலும் கவிதையை எழுதும் உரிமை அவருக்கு உண்டுதானே?
அதிலே தமக்கு எதிர்ப்பு இருக்கும் வார்த்தைகளை தொங்கி கொண்டு எழுதுவது முதிர்ச்சியானதாக இல்லை.

இது தவிர எனக்கு இருக்கும் கேள்வி, ஜெமோ போன்றவர்களின் மொழியைத்தாண்டியும் அவரது/அவர்போன்றவர்களின் அரசியலை எதிர்க்க வேண்டியம் அவசியம் உள்ளது எனும் போது , வினவு போன்றவர்களின் மொழியைத்தா ண்டி (இங்கே லீனா, வினவு என்றவர்களை தவிர்த்து )அவர்கள் வைக்கும் அரசியலை வாசிக்கவேண்டும் (தேவைப்பட்டால் எதிர்க்கவும் வேண்டும்)என்பது தானே சரியான‌தாக இருக்கும்.... மொழிக்காக/புனைவுக்காக/சித்திரத்துக்காக/அதிவலைகளுக்காக‌ ஜெமோ வை ஏற்பவர்களை அவரது அரசியலை கேள்வி கேட்காமல் இருப்பதை எப்படி நாம் கேள்வி கேட்பது?

1/07/2010 6:25 AM  
Blogger ROSAVASANTH said...

எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றி.

லீனாவின் கவிதையை விமர்சிப்பதிலோ, அவரது சமூக செயல்பாடுகளில் வெளிப்படும் அரசியலை, திரைப்படத்தின் அரசியலை பேசுவதோ பிரச்சனையில்லை. அதை செய்யும் போது கையெலெடுக்கும் அதிகாரமும், ஆண் திமிரும்தான் பிரச்சனை.

லீனாவின் கவிதையை மோசம் என்றோ, அது கவிதையே இல்லை என்றோ, குப்பை என்றோ சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு சொல்வதினால் மட்டும் எந்த ஆணாதிக்கமும் வெளிப்படவில்லை. (பெண் கவிதைகளை விமர்சித்தாலே ஆணாதிக்கம் என்று சொல்ல கூடிய ஒரு போக்கும் உள்ளது.) அவ்வாறு சொல்வதற்கு பயன்படுத்தப்படும் சாய்வுகளையும் விமர்சிக்கலாம்.

முதலில் அந்த கவிதையை எழுத லீனாவிற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. அது எந்த விதத்திலும் ஒரு அத்துமீறல் இல்லை. ஆணாதிக்கம் கட்டமைத்த ஒழுக்கவிதிகளின் படி மட்டுமே அது அத்துமீறல். தனிப்பட்ட முறையில் அதை ஒரு சிறந்த கவிதையாக நான் ரசிக்கவில்லை என்று சொல்ல விரும்புகிறேன். கடந்த 4 நாட்களில் இணையத்திலும், புத்தக சந்தையில் சும்மா புரட்டியும் சுமார் (நான் முன் வாசித்திராத புதியவர்களின்) 40 கவிதைகள் வாசித்தேன். எல்லாம் வார்த்தை குப்பையாக தோன்றியது. அந்த கவிதைகளை விட ரசிக்க கூடிய கவிதையாக லீனாவின் கவிதை எனக்கு தோன்றியது என்று மட்டும் தனிப்பட்ட அளவில் சொல்ல முடியும்.

ஆனால் லீனாவின் கவிதையை ஒரு அத்துமீறலாக ஆண் மனம் பார்கிறது. அதை தனது வர்க்க பார்வை என்கிர தேர்வுகளுடன் சேர்த்து தர்க்கப்படுத்தி, சம்பிரதாய ஆண் திமிர் கொண்ட வாதங்களை முன்வைக்கிறது. இதற்கு சாதகமாக ஒரு தினத்தந்தியில் ஒரு செய்தியும் வருகிறது. கும்பல் மனத்துடன் இதை மற்ற ஆண் கூட்டம் வாசித்து, பின்னூட்டமிட்டு தன் ஆண்குறித்திமிரை சாணை பிடித்து கொள்கிறது. அதற்கு எதிராகவே இந்த சிறு பதிவு.

மற்ற அரசியல்களில் இங்கே நான் இறங்கவில்லை.

1/07/2010 11:57 AM  
Blogger மிதக்கும்வெளி said...

/மற்றபடி ரோசாவின் விமர்சனங்கள் முழுக்க கம்யூனிச எதிர்ப்பில் இருந்து உருவாவதாகவே நாம் எடுத்துக் கொள்கிறோம்/

இது வினவுத்தளத்தில் ராவணன் என்ற தோழர் உங்கள் ஒட்டுமொத்தப் பதிவையும் ஊத்திமூடியுள்ள பின்னூட்டம். இந்த பதிவில் எங்கே கம்யூனிச எதிர்ப்பு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நேற்று ஒரு தோழர், யாரோ ஒரு அனாமதேயம் அல்ல, வழக்கமாக பின்னூட்டங்களில் வாதிடுகிற தோழர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார், ‘’லீனா தன் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார், ஷோபாசக்தியும் அவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்” என்கிற ரீதியில். பொதுவாக தினத்தந்தியில் ஒரு ஆணும் பெண்னும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானாலும் அல்லது ‘கள்ளக்காதல்’ விஷயங்கள் வெளியானாலும் அந்த செய்தியில் தவறாமல் ஒரு வரி வரும், ‘உற்சாகபானம் அருந்தி உல்லாசமாய் இருந்தார்களாம்’. இதுமாதிரியான சொல்நடைக்கும் இத்தகைய தோழர்களின் பின்னூட்டங்களிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஷோபா-லீனா திருமணம் குறித்த பின்னூட்டம் இன்று காணப்படவில்லை, அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அழிக்கப்படாத பல ’புரட்சிகரமான’ பின்னூட்டங்களில் சாம்பிளுக்கு ஒன்று,

‘’
இந்த லீனா லீனா ன்னு சொல்றீங்களே அது யாருங்கோ. வேலு பிரபாகரனின் ஒரு படத்தில் அவுத்து போட்டு நடிச்சதே அதுவாங்கோ”

முதலில் லீனாவின் இரண்டாவது கவிதையில் எனக்கு வேறுபாடு இருக்கிறது. ஆனால் முதல் கவிதை, உலகமெங்கும் போர்களிலும் கலவரங்களிலும் நேரடியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களைக் குறித்து பேசுவதாக இருக்கிறது என்பதாகத்தான் நான் புரிந்துகொள்கிறேன். அது மட்டுமில்லாது புரட்சி பேசுபவர்களிலிருந்து அடிப்படைவாதிகளாக இருக்கிற ஆண்கள் வரை (இந்த பின்னூட்டத்தை எழுதிக் கொண்டிருக்கும் நான் உட்பட) ஆண்களாகவே இருக்கிறார்கள் என்றும் அந்த கவிதையைப் புரிந்துகொண்டேன். எனது புரிதலை வலுப்படுத்தியும் லீனாவின் கவிதைக்குக் கூடுதல் நியாயம் சேர்த்தும் இந்த பதிவின் மூலம் நிருபித்திருக்கிறார்கள் வினவு தோழர்கள்.

இன்னொன்றையும் சொல்லிவிடலாம். பர்தா குறித்த பதிவொன்றில் ஒன்றுக்கும் ஆகாத ‘ஈரோடு பதிவர் சந்திப்பில் வடை மெனுவில் இருந்ததா இல்லையா’ என்கிற விஷயமே சர்வதேசப் பதிவர் எதிர்ப்புகளுக்கு உள்ளாகி அந்த பத்தியே நீக்கப்பட்டது. ஆனால் ‘செங்கடல்’ ஒரு புலி எதிர்ப்பு படம் என்றும் இன்னும் ’பேசப்படுவதாக கேள்விப்படுவதாக நம்பப்படுகிறது’ என்கிற ரீதியில் எழுதப்பட்டுள்ள வரிகளை வினவு என்ன செய்யப்போகிறது?

1/07/2010 5:32 PM  
Blogger நர்சிம் said...

சார். இந்தப் பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

1/07/2010 7:15 PM  
Blogger Unknown said...

ம.க.இ.கவின் வினவு எழுதியிருக்கும் இக்கட்டுரையை படித்த பொழுது, தொண்ணூறுகளில் பின்ந‌வீனத்துவத்தை 'அம்பலப்படுத்தும்'(?) பொருட்டு அ. மார்க்ஸை 'அந்தோனிசாமி மார்க்ஸ்' என விளித்து புதிய ஜனநாயகம் எழுதிய கட்டுரைதான் நினைவுக்கு வந்தது. அக்கட்டுரை வெளியான சமயத்தில் சிற்றிதழ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ம.க.இ.கவின் இந்த உத்தி இந்துத்துவ எதிர்ப்பு தளத்தில் செயலாற்றி வரும் அ. மார்க்சினை ஒரு கிறிஸ்தவராக இந்துத்துவவாதிகளுக்கு காட்டிக் கொடுக்கும் முயற்சி என்றும் கண்டிக்கப்பட்டது.

அடுத்த இதழில் புதிய ஜனநாயகம் இதற்கு விளக்கம் எழுதியது. அந்த‌ கட்டுரையின் தலைப்பு 'பெயரை கட்டுடைத்தாலே கலங்கும் பின்னவீனத்துவம்', இதுதான் அவர்களது விமர்சன பாணி.

மேலும் லீனா மணிமேகலை ஒரு பெண் என்பதனால்தான் இப்படி இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பலர் கூறுகிறார்கள் உண்மையில் அவர் பெண்ணாக இருப்பதனால்தான் அவர்கள் இத்தோடு விட்டார்கள் என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் விக்ரமாதித்தியன், லஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை வீடு புகுந்து தாக்கி அவர்களிடம் எழுதி வாங்கியது போல ஏதாவது செய்து தொலைத்திருப்பார்கள். நாம் ஒன்றும் கேட்டிருக்க முடியாது, ஏனெனில் அவர்களுக்கு அமைப்பு இருக்கிறது அவர்களை பொறுத்தவரை சிற்றிதழ்காரர்கள் எல்லாம் கோமாளிகள்தான், அடித்தால் கேட்க நாதியில்லாத கோமாளிகள்.

1/07/2010 9:16 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.

சுகுணா,

எதிராளிக்கு பதில் சொல்வதற்கு, தனக்கே நியாயம் என்று தோன்றும் தர்க்கம் சிக்காத போது, பலர் பொதுவாக ஆடும் அழுகுணி ஆட்டத்தை, இவர்கள் ' கம்யூனிஸ எதிர்ப்பாக எடுத்து கொள்வோம்' என்பதாக சொல்வார்கள். இந்த பதிவு கம்யூனிஸ எதிர்பாக எழுதப்படவில்லை எனினும், அவர்கள் என்னை அப்படி குறிப்பிட்ட பொருளில் குற்றம் சாட்டினால் அது நியாயம் என்றுதான் நினைக்கிறேன்.

கேபிடலஸைத்தை தீவிராமாக எதிர்ப்பதாக கருதிக் கொண்டிருக்கும் நான் இன்னொரு புறம் இவர்கள் முன்வைக்கும் கம்யூனிஸத்திற்கு எதிர்பாகத்தான் கருத்து வைத்திருக்கிறேன். இவர்கள் முன்வைக்கும் கம்யூனிஸ குண்டூசி கொண்டு கேபிலஸத்தின் நக அழுக்கை கூட நீக்க முடியாது என்றே தீவிரமாக நம்புகிறேன். (ஆனால் களத்தில் நிற்கும் முதாலாளித்துவத்திற்கான ஒரே எதிர்வினை என்ற வகையில் சட்டிஸ்கர் போன்ற இடங்களில் போராடும் மாவோயிஸ்டுகள் பற்றி பொதுவாக எண்ணி வந்தேன். அவைகளையும் அண்மைக்காலமாக பரிசீலித்து மாற்றிக் கொண்டிருக்கிறேன்.)

பயில்வான்,

முந்தய நாள் வரை கூட இருந்த தோழரையே கொலை செய்ய கூடியது இந்த அரசியல். மற்றது எல்லாம் எந்த மூலைக்கு?

1/08/2010 3:40 AM  
Blogger குப்பன்.யாஹூ said...

I have not read that Vinavu's post . I am in dilemma whether to read vInavu posts or not.so Far I have read one or 2 posts of Vinavu only (may be 2 or 3 years back then I stopped reading).

Leaving that, we should understand and accept one truth, about Tamilnadu fisherman

90% of the time, our Tamilnadu fishermen crosses the border , but I am not suporting the 3rd rated tretment being done by srilankan army.

This sea border area is grey, so we should work out for long term system based approach rather than taking film.

We should not blindly support our Tamilnadu fishermen just because they speak Tamil, they cross the borders lot of time.

There is one more hidden matter is there, most of the time these fishermen help to smuggle petrol, drugs, money for LTTE, thats why Vaiko is always disturbed whenever fishermen is caught by srilankan police/army.

1/08/2010 4:51 AM  
Blogger ROSAVASANTH said...

குப்பன் யாஹு அடுத்த முறை எதாவது ஒரு வெளிநாட்டில் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு நிற்கும்போது கேள்விகேட்காமல் போட்டுத்தள்ளினால் எப்படி இருக்கும்? அது போலத்தான் எல்லையை தாண்டுபவர்களை சுடுவது என்பது -அதாவது எல்லையை உண்மையிலேயே தாண்டுபோது.

உண்மையில் இந்த விஷயத்தில் பல நேரங்களில் எல்லையை தாண்டி இந்திய கடலெல்லைக்குள் வந்து, சில சமயங்கள் இந்திய கடற்கரை வரை வந்து சிங்கள ராணுவம் சுட்டு விட்டு போவதுண்டு; இந்திய எல்லைக்குள் -இலங்கை மீனவர்கள் அல்ல- இலங்கை கடற்படை அத்துமீறி அராஜகமும் செய்து விட்டு போகும் போது, இந்திய கடற்படை வாளாவிருக்கிறது என்பதுதான் யதார்த்தம். பல நேரங்களின் மீனவர்கள் மீதான கொடுமைகளில் இந்திய கடற்படையினரும் ஈடுபடுவதுண்டு.

குப்பன் தங்கியிருக்கும் ஏரியாவில் சிலர் கஞ்சா விற்பதற்காக, இவர் வீடு புகுந்து போலிஸ் ரெய்டு நடத்தி வீட்டில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நியாயமாய் எப்படி பேசுவது என்று யாஹுவிற்கு ஒருவேளை உறைக்கலாம். அரை மணி நேர தொலைவில் புலிகளும், அவர்களிடம் ஏரளமான பணமும் இருந்தால் சில மீனர்வர்கள் பெட்ரோல், டீசல் சப்ளை பண்ணத்தான் செய்வார்கள். அதை ஒட்டுமொத்த மீனவர் மீதான தாக்குதலுக்கான நியாயமாய் சொல்வதுதான் அப்பட்டமான இன துவேஷம். ஆனால் புலிகள் முழுவதும் அழிந்த பிறகும் தாக்குதல் தொடர்வதையும், உண்மையில் தாக்குதல் இன்னமும் தீவிரமடைந்துள்ளதையும் புரிந்து கொள்ள வேணும். இதில் இந்திய அரசும், இந்திய கடற்படையும் முழுக்க சிங்கள படையின் அராஜகங்களுக்கு துணை நிற்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் தெளிவாகியுள்ள உண்மைகள்

1/08/2010 1:01 PM  
Blogger NICHAAMAM said...

இனிய ரோசா!!
இந்திய மீனவர்கள் தமது மீன்பிடி முறைமைகளால் (குறிப்பாக இழுவைப்படகு)
தமிழக கடல்வளங்களை ஒன்றுமில்லாமலாக்கி அங்கு அவர்கள் தொழிலுக்கான வளங்கள் எதுவும் இல்லை என்ற நிலையில் பத்தாண்டுகளுக்கும்மேலாகவே இலங்கையின் கரையோரங்களையும் மீன்வளங்களையும் தமிழக கடல்போலவே ஆக்கிவருகிறார்கள். இருபகுதி மீனவர்களுமே இதனால் தொடர்ந்து பிரச்சனைப்படுகிறார்கள்.சென்றவாரம் தமிழக மின்பிடிப்படகு நெடுந்தீவு கரையிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவுக்கு வந்து இலங்கை மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் அறுத்து வாரிச்சுறூட்டிக்கொண்டுபோனதை யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தலைவர் தருமரத்தினம் அறிக்கையிட்டார்.மேலும் அவர் இந்திய மீன்பிடி முறைமைகள் தமக்கு எந்த பிடிபாடுகளும் இல்லாமல் ஆக்கிவிடும் எனவும் இந்திய மீனவர்களின் இலங்கை கடல் எல்லை தாண்டும் நிலையை எதிர்க்கிறார். இலங்கையின் மீன்பிடி முறைமைகள் கடல் வளத்திற்கு பாதிப்பில்லாதவை. தமிழகத்தில் தொழிற்படுவது பெருவணீகம்.லாப வெறி.
இப்போது யுத்தம் முடிந்தாலுங்கூட தமிழக மீனவர்களின் இலங்கைவருகையை இலங்கைக்கடற்படை தடுத்து நிறுத்தும்போது இலங்கைமீனவர்கள் அதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.
இதில் தவறூதலாக வரும் மீனவர்கள் போக பெரும்பாலான தமிழக மீனவர்களின் நிலையே இலங்கை கடல் எல்லைக்குள்ளே மீன் பிடித்தால் மட்டுமே வயிற்றுப்பாட்டிற்கு ஆகும் என்ற நிலை .
இந்திய கடற்படை இதை தெரிந்துகொண்டுதான் அனுமதிக்கிறது.
பலமுறை பலவருடமாக இது விவாதத்தில் இருந்துகொண்டு இருக்கிறது.
பிரச்சனை மிகவும் சிக்கலானவை.
இதற்கான தீர்வாக முன்மொழியப்பட்டவை
1)தமிழக மீன்பிடிமுறை மாற்றியமைக்கப்படவேண்டும்.
2)இலங்கை எல்லைக்குள் வராதபடி இந்திய கடற்படை தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தவேண்டும்.

நடக்குமா?

1/08/2010 8:57 PM  
Blogger ROSAVASANTH said...

சுகன்,

இந்த பிரச்சனையை நான் முன்பு எழுப்பிய போது சில இந்திய தேசிய வெறியர்கள் முன்வைத்த அதே வாதத்தை இப்போது நீங்களும் வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள். சிங்களப்படை ஈழத்து மீனவர்கள் மீதான அக்கறையினால்தான் தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய எல்லைக்குள் கூட நுழைந்து சுடுகிறார்கள் என்று, இந்திய கடற்படை அதனால்தான் தன் இறையான்மை மீறும்போது கூட வாளாவிருக்கிறது என்று கூசாமல் சொல்கிற அளவிற்கு நீங்கள் இறங்குவீர்கள் என்பது நான் எதிர்பார்க்காதது அல்ல.

தமிழ்நாட்டு மீனவர்களால் பிரச்சனைகள் இருக்கலாம். அது குறித்து பேசுவது அவசியம், அது வேறு விஷயம். அதை முன்வைத்து இரண்டு அரசுகளின் ராணுவம் அவர்கள் மீது நடத்தும் வெறித்தனமான தாக்குதலுக்கு தர்க்க நியாயம் அளிப்பது அயோக்கியத்தனம். இதுவரை புலிகளுக்கு டீஸல் அனுப்புவதால் சுடுகிறோம் என்றார்கள். இப்போது இன்னமும் இந்த வாதத்தை அவர்களே சொல்ல தொடங்கவில்லை. உங்களை போன்றவர்கள் எடுத்து கொடுக்க தொடங்கியிருக்கிறீர்கள். ஈழத்து தமிழினத்தின் மீது நடந்த படுகொலைகளை நியாயப்படுத்துவதுடன் உங்களுக்கு நிறைவு அளிக்கவில்லை போலிருக்கிறது. எப்படியும் அது உங்கள் பிரச்சனை. இதுவரை சுமார் 500 தமிழ்னாட்டு மீனவர்கள் சிங்களப்படையால் கொல்லப்பட்டிருக்கலாம். தினமும் பலவிதமான துன்புறுத்தல்கள். இதெற்கெல்லாம் தமிழகத்து மீனவ்ர்களின் மீன் பிடி முறை ஈழத்து மீன்பிடி தொழிலை பாதிப்பதுதான் காரணம் என்பதை (அப்படி ஒன்று இல்லை என்று நான் சொல்லவில்லை), வேறு இணையான (உங்களுக்கு பிடித்த பார்பனியம், சாதியத்தை முன்வைத்த) உதாரணங்களுடன் ஒப்பிட முடியும். ஆனால் எதையும் பரிசீலிக்க கூடிய நிலையில் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. உங்கள் மீதான என் அன்பு மாறவில்லை. உங்களின் நேர்மையையும் நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அரசியல்ரீதியாக உங்களுடன் உரையாடும் நம்பிக்கையை நான் இழந்து விட்டேன். ஸாரி!

1/09/2010 12:29 AM  
Blogger NICHAAMAM said...

பேரன்பு ரோசா!

://இரண்டு அரசுகளின் ராணுவம் அவர்கள் மீது நடத்தும் வெறித்தனமான தாக்குதலுக்கு தர்க்க நியாயம் அளிப்பது அயோக்கியத்தனம்://

நான் எங்கே தர்க்க நியாயம் அளித்தேன்?!
நீங்கள் என்மேல் லாவகமாக திருப்பிவிடும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.
குறிப்பாக நான் மீனவர்சமூகத்தில் அதிலும் திமிலர் என்று அழைக்கப்படுகின்ற மீனவர்சமூகத்தில் ஆகக்கீழான தட்டில் சாதிரீதியாக இருப்பதால் எனக்கு இப்பிரச்சனையில் புரிதல் உண்டு.
எனக்கு இது இருநாட்டு இறைமை சார்ந்த, கடற்படைகள் சார்ந்த பிரச்சனையல்ல. ஆழிசூழ் உலகிலும் வாடைக்காற்றிலும் தேடும் ,கண்டுகொள்ளும் பிரச்சனையல்ல .
கச்சதீவு சேதுகால்வாய் இவற்றில் நமக்கு பல்வேறு நிலைப்பாடுகள் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டின் நீங்கள் குறீப்பிடும் சுட்டுக்கொல்லப்பட்ட 500 மீனவர்கள் குறித்து உங்களைவிட நான் அதிகம் துயரடைந்திருக்கிறேன். யுத்தம் முடிவடைந்து இப்பாது சுதந்திரமாக தொழில்செய்ய கூடிய சூழ்நிலை ஏற்பட்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
பிரச்சனைகளை இலகுவாக அரசியல் முத்திரை குத்திவிட்டு தப்பித்து ஓடும் மனநிலைக்கு நீங்கள் ஆட்படாது இருக்கவேண்டும்.
இது தொடரப்போகின்ற பிரச்சனை .
மீனவர்கள் தரப்பிலிருந்து இதற்கான தீர்வுத்திட்டங்கள் உடன்பாடுகள் சமரசங்கள் குறித்து விவாதங்கள் தேவைப்படுகின்றன.

1/09/2010 5:54 AM  
Blogger ROSAVASANTH said...

அன்பு சுகன்,

நீங்கள் தர்க்க நியாயம் அளிக்க வில்லையா. ரொம்ப நல்லது. நான் சந்தோஷமடைகிறேன். உங்களை அனாவசியமாக குற்றம் சாட்டி நான் என்ன அடையப்போகிறேன்?

இங்கே கடற்படை அட்டூழிய்ங்கள் தவிர வேறு எதையும் பேசவில்லையே. நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் அதை பற்றி எதுவுமே குறிப்பிடாமல், //தமிழக மீனவர்களின் இலங்கைவருகையை இலங்கைக்கடற்படை தடுத்து நிறுத்தும்போது..//, //இந்திய கடற்படை இதை தெரிந்துகொண்டுதான் அனுமதிக்கிறது...// என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக குறிப்பிடும்போது நீங்கள் விரும்பாவிட்டாலும் தர்க்க நியாயம் வந்து விடுகிறது. நான் அவ்வாறு எடுத்து கொள்ளாவிட்டாலும், வேறு பலர் அவ்வாறு எடுக்க முகாந்திரம் இருக்கிறது.

தினமும் ராமேஸ்வரத்தில் பாதிக்கபடுபவர்கள் எல்லாம் இழுவை படகுகளில் எல்லை தாண்டியவர்கள் அல்ல. நீங்கள் குறிப்பிடும் பிரச்சனைகளுடன் சம்பந்தப்படாமல் இந்த தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கே 20 வருடங்களாய், (இன்னும்) தொடரும் அட்டூழியங்களை, வேறு ஒரு (யதார்த்தத்தில் இருக்க கூடிய) பிரச்சனையை முன்வைத்து திசை திருப்ப கூடிய எல்லா சாத்தியமும் இருக்கிறது. / யுத்தம் முடிவடைந்து இப்பாது சுதந்திரமாக தொழில்செய்ய கூடிய சூழ்நிலை ஏற்பட்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.../ என்கிறீர்கள். இந்து பத்திரிகை சொல்வது மாதிரி இருக்கிறது. நான் இதை மறுத்தால் அரசியல் முத்திரை என்கிறீர்கள்.

1/09/2010 1:07 PM  
Blogger NICHAAMAM said...

இனிய ரோசா!
இன்றைய பி.பி.சி தமிழ்ச்சேவை கேட்டீர்களா ?

1/13/2010 3:57 AM  
Blogger ROSAVASANTH said...

இல்லை சுகன். இணைப்பு இருந்தால் இங்கே அளிக்கவும். நன்றி.

1/13/2010 1:39 PM  
Blogger ROSAVASANTH said...

இல்லை சுகன். இணைப்பு இருந்தால் இங்கே அளிக்கவும். நன்றி.

1/13/2010 1:39 PM  
Blogger NICHAAMAM said...

http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1

1/13/2010 2:30 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புக்குரிய சுகன், நன்றி, கேட்டேன் -நீங்கள் குறிப்பாக சுட்ட விரும்பிய செய்தியையும். பல காரணங்களால் இது கவலையளிக்கிறது.

பலம் வாய்ந்த இழுவை படகுகளுடன் தமிழகத்தின் சில மீனவர்கள் ஈழத்து கடலெல்லையில் செய்வது அநியாயம். ஈழப்பகுதியில் இதுவரை மீன் பிடிக்க இருந்த தடையினால் இந்தகைய அத்து மீறலுக்கு அவர்கள் பழகியும் இருக்கலாம். இதை தடுக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

1. முதல் காரணம் இது ஈழத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதால். இது மிக முக்கியமான இயற்க்கையான காரணம்.

2. அடுத்து சிங்களப்படை செய்யும் அத்துமீறல்களையும், இந்தியாவின் மௌனத்தையும் இதை முன்வைத்து தர்க்கப்படுத்தி திசை திிருப்ப முடியும் என்பதால். குறிப்பாக இழுவை படகில் ஏறியே இராத நூற்றுக்கணாக்காகன எளிய மீனவர்கள் தினமும் கொள்ளும் பீதியும் துன்பங்களையும் இதை முன்வைத்து ஒரு நியாயத்தை அளிக்க முடியும். (இன்னும் குறிப்பாக இந்திய கடலெல்லைக்குள் பிரவேசித்து சிங்களப்படை செய்யும் அக்கிரமங்களை)

3. மூன்றாவதாக பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவிகள். புலிகளுக்கு செய்த உதவிகளை சொல்லவில்லை. நிராதரவாக வருபவர்களுக்கு, மணல்திட்டில் விடப்பட்டு தவிப்பவர்களுக்கு இதுவரை எந்த பலனும் எதிர்பாரமல் -சில நேரங்களில் இந்திய கடற்படையின் அச்சுறுத்தல்களுக்கு இடையில்- பல தமிழக மீனவர்கள் செய்துள்ள உதவிகள் ஏராளம். இந்த பிரச்சனை இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்படுத்தப்போகும் மனப்பான்மை இந்த உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால்.

மற்றபடி ஏற்கனவே சொன்ன கருத்துக்களில் மாற்றமில்லை.

1/13/2010 6:01 PM  
Blogger NICHAAMAM said...

பேரன்பு ரோசா!
எப்போதும்போலவே மிகவும் பொறுப்போடும் நிதானமாகவும் பிரச்சனைகளை அலசுகிறீர்கள்,
தொடர்ந்து எழுதவேண்டும்.
துணைவியார் வசுமதி,மகன் ஆத்மாநாம் ஆகியோருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இனிய பொங்கல் ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1/13/2010 6:52 PM  
Blogger ROSAVASANTH said...

எல்லோரும் நலம் சுகன். உங்களுக்கும் எங்கள் அன்பும், பொங்கல் வாழ்த்துக்களும். (சற்று தாமதமாக புத்தாண்டு வாழ்த்துக்களும்!)

1/13/2010 8:46 PM  
Blogger ஏழர said...

வினவு குழுவில் ஆண்களைத்தவிர யாரும் இருக்கமுடியாது என்ற ஆணாதிக்க கருத்தியல் பதிவிலும் பின்னூட்டங்களிலும் பரவலாக வெளிவந்திருக்கின்றது. ம.க.இ.க வை சேர்ந்த பெண்களிடம் பேசிப்பாருங்கள் இந்த கருத்தை அப்படியே வெளிப்படுத்துவார்கள்

1/13/2010 9:17 PM  
Blogger ROSAVASANTH said...

சின சேனாவில் இருக்கும் பெண்களும் சிவசேனா ஆண்களை போலவே தீபா மெஹ்தாவின் ஃபயர் படம் ஓடிய தியேட்டர்களை தாக்கினார்கள்; பல பெண்ணியவாதிகளை திட்டினார்கள்; நவீன உடையணிந்த பெண்களை புடவை கட்டச் சொன்னார்கள்; இன்னனும் பால்தாக்கரே சொன்ன பலவற்றை அப்படியே செய்தார்கள்.

1/13/2010 9:24 PM  
Blogger ஏழர said...

நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவை எழுதியது ஒரு பெண் என்கிறேன் நான். பெண்களுக்கும் ஆணாதிக்கம் உண்டு என்கிறீர்களா?

1/13/2010 9:48 PM  
Blogger ROSAVASANTH said...

வினவில் போராட்டம், ராவணன் என்ற பெயரில் இரண்டு பதிவகள் எழுதியவர்கள் இருவரும் பெண்கள் என்கிறீர்களா? (இப்போதுதான் இப்படி சொல்கிறீர்கள்.) இந்த விஷயத்தை வினவு பதிவில் வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது நீங்களாக யூகித்தோ அறிந்தோ சொல்கிறீர்களா?

இவை ஒருபுறமிருக்க ஆணாதிக்க கருத்தியல் பெண்களிடமும் வெளிப்படக் கூடும். அதில் என்ன சந்தேகம் வேண்டி கிடக்கிறது? ஆனால் ஆணிடம் வெளிபடுபவதற்கும், பெண்ணிடம் வெளிபடுவதற்கும் அடிப்படையிலும், தன்மையிலும் பல வித்தியாசங்கள் உண்டு. அதி பிறகு பேசலாம். ஆனால் வினவில் எழுதியுள்ளதில் வெளிபடும் ஆண் திமிர் ஒரு ஆணிடமிருந்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது. சரியாக விசாரித்து சொல்லுங்கள்.

1/13/2010 10:04 PM  
Blogger ஏழர said...

சரியாக விசாரித்து சொல்லுங்கள்.@@

சரியாக விசாரிக்காமல் ஆண்தான் என நீங்கள் தீப்பெழுதியது ஏனோ? வினவுவின் இந்த பதிவை பிரான்ஸ் தமிழச்சி ஏற்கிறார்! அவரை ஆணாதிக்க கருத்தியல் கொண்டவர் என்று நீங்கள் விமர்சனம் செய்கிறீர்களா?

1/13/2010 10:16 PM  
Blogger ROSAVASANTH said...

இதென்ன ஏழரை விளையாட்டு? எழுதியது ஆணா, பெண்ணா, உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? தெரிந்து கொண்டு //அந்த பதிவை எழுதியது ஒரு பெண் என்கிறேன் நான். // என்று சொன்னீர்களா, தெரியாமல் சொன்னீர்களா?

அதாவது ̀ராவணன், போராட்டம்' என்ற பெயரில் எழுதியவர்கள் பெண்ணா? உங்களுக்கு நன்றாக தெரியுமா? இவை என் கேள்விகள். தெளிவான மொழியில் பதில் சொல்லிவிட்டு மேலே கேள்விகளை எழுப்புங்கள். நன்றி!

1/14/2010 1:16 AM  
Blogger ஏழர said...

இதென்ன ஏழரை விளையாட்டு? எழுதியது ஆணா, பெண்ணா, உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? @@@ அப்ப உங்களுக்கு தெரியாது என்று ஒத்துக்கொள்கிறீர்கள். ஆண்தான் என்று ஊகித்து பதிவும் பின்னூட்டமும் எழுதியிருக்கிறீர்கள்.
வினவு ஊகித்து எழுதியது குற்றமென்றும் விமர்சித்திருக்கின்றீர்கள். இது நல்ல நியாயம் தான்

1/14/2010 1:49 AM  
Blogger ஏழர said...

அடுத்து நான் குறிப்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லையே.
பிரான்ஸ் தமிழச்சி வினவின் இந்த பதிவு சரி என்று ஏற்கிறார்! அவரை ஆணாதிக்க கருத்தியல் கொண்டவர் என்று நீங்கள் விமர்சனம் செய்கிறீர்களா?. ஆணாதிக்கத்துக்கும் அந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று உங்களால் விளக்கமுடியுமா?

1/14/2010 1:53 AM  
Blogger ROSAVASANTH said...

ஏன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க வேண்டும்? அதுவும் இயலபான என் கேள்விக்கு நீங்கள் பதில் அளிகாத போது. நீங்கள் என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அந்த குறிப்பிட்ட வினவு பதிவை ராவணன் என்ற பெயரில் எழுதியது பெண் என நீங்கள் கடந்த பின்னூட்டத்தில் எழுதியது உண்மையா பொய்யா? நீங்கள் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னை மேலே கேள்வி கேட்கிறீர்கள். இதில் உண்மை, பொய் என்ற ஒரு வார்த்தையில் பதில் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதை விட்டு விட்டு வாய்பந்தலில் என்ன் பயன்?

அந்த குறிப்பிட்ட பதிவில் வெளிப்படும் ஆணாதிக்க வக்கிரங்கள் புரியாத நபரிடம் நான் பேசவே தயாரயில்லை. அதை விளக்குவது என் நோக்கம் கிடையாது. தமிழச்சி ஆணாதிக்க கருத்தியல் கொண்டிராவிட்டாலும் தனிப்பட்ட வன்மம் காரணமாக வினவை ஆதரிக்க கூடும். இன்னும் சொல்லப்போனால் வினவுக்கு கூட ஆணாதிக்க கருத்தியல்களுடன் ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். அரசியல் வன்மம், மற்றும் வன்மம் சார்ந்த அரசியல் காரணமாக இப்படி எழுதியிருக்கலாம். மேலே என் பதிவிலேயே // வேறு இடங்களில் இவர்கள் ஆணாதிக்கத்தை எதிர்க்க தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.// என்றும் எழுதியுள்ளேன். என்ன வகை ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் கருத்தை எதிர்ப்பை முன்வைக்க முடியும்.

மீண்டும்.. அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு மேற்படி கேள்வி கேட்கும் பழக்கத்துக்கு வாருங்கள்.

1/14/2010 2:09 AM  
Blogger ஏழர said...

அப்போ உங்களுக்கு அதை எழுதியது ஆண்தான் என்பது உறுதியாக தெரியாது, எனக்கு அது பெண்தான் என்பது உறுதியாக தெரியாது. நீங்கள் ஆண் என்று ஊகித்து பதிவு பின்னூட்டம் எழுதியது போல நான் பெண் என்று ஊகித்து பின்னூட்டம் எழுதுகிறேன்.

உங்களுக்கு நீங்கள் கொடுத்துக்கொள்ளும் ஊகித்து எழுதும் சலுகையை நீங்கள் வினவுக்கு கொடுக்காததை பற்றிய எனது முந்தைய பின்னூட்டத்தை நீங்கள் டெலிட் செய்தது போல இதையும் செய்வீர்களா, யாருக்குகாக உங்களை நீங்கள்,நிரூபிக்க வேண்டும். நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள் எனது கேள்வி உங்களின் இமேஜயோ மற்றவர்கள் உங்கள் மீது வைத்துள்ள கருத்தையோ மாற்றாது.
துணித்து வெளியிடுங்கள்

1/14/2010 2:19 AM  
Blogger ஏழர said...

பின்னூட்டங்களை வெளியிட்டமைக்கு நன்றி!

1/14/2010 2:24 AM  
Blogger ROSAVASANTH said...

உங்கள் பின்னூட்டம் ட்லீட் செய்யப்படவில்லை. பிளாகரில் இருந்து மின்னஞ்சலில் தாமதமாக பின்னர் வந்தது. அப்படி டிலீட் செய்ய வேண்டிய அளவிற்கு அதில் என்ன எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் கிடுக்கிபிடி கேள்வி புரட்சிகரமாக இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அப்படி எல்லாம் உங்களுக்கு நீங்களே பில்டப் செய்துகொண்டு நினைத்து கொள்ள உரிமை உண்டு.

கடைசியாக சுற்றி வளைத்து ராவ்ணன் என்ற பெயரில் அந்த பதிவை எழுதியது ஒரு பெண் என்று நீங்கள் பொய் உரைத்தீர்கள் என்பதையும், நான் எழுதியதில் பிழை எதுவும் இல்லை என்றும் சுற்றி வளைத்து (புத்திசாலித்தனம் என்று நினைத்து அசட்டுத்தனமாக) ஒப்புகொண்டதற்கு நன்றி. மேலே பேச ஒரு எழவும் எனக்கு இல்லை.

1/14/2010 2:27 AM  
Blogger ROSAVASANTH said...

தோழர், எந்தவகை பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதை தவிர மற்றவை எல்லாம் தடை செய்யப்படாமல் வெளிவரும்.

1/14/2010 2:32 AM  
Blogger ஏழர said...

உங்களிடம் மேதாவித்தனத்தை காட்டும் அறிவெல்லாம் எனக்கு இல்லை. உண்மையிலேயே தமிழச்சி எழுதியதை படித்த பின்பு வினவுவில் அதை ஒரு பெண்தான் எழுதியிருப்பார் என்று நினைத்தேன். அது சரி என இப்பவும் நம்புகிறேன். ஒரு வேளை அந்த பதிவை எழுதியது ஒரு பெண்ணென்றால் உங்கள் கருத்து என்னவாயிருக்கும் என்று அறிய விரும்பினேன். அறிந்தேன். இதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்.

1/14/2010 2:33 AM  
Blogger ஏழர said...

தோழர், எந்தவகை @@@ ஐயோ நான் தோழரெல்லாம் இல்லீங்க. பெரியார் கருத்துல கொஞ்சம் நாட்டம் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்களை வாசிப்பேன், அப்படித்தான் தமிழச்சி, வினவு வழியா உங்க தளத்துக்கு வந்தேன். என் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதியதற்கு நன்றி

1/14/2010 2:37 AM  
Blogger ROSAVASANTH said...

கோபம் நிச்சயம் இல்லை. அது பெண்தான் என்று நீங்கள் சொன்னவுடன் நான் அதை உறுதி செய்ய விரும்பினேன். அதற்கு பதில் சொல்லாமல் வேறு விஷயங்களை பேசினால் எரிச்சல் வராமல் என்ன செய்யும்? அந்த எரிச்சல்தான் என் பின்னூட்டத்தில் வெளிப்பட்டிருக்கிறது. எழுதியது பெண் என்று தெரிந்தால் நிச்சயம் என் கருத்தை மறு பரிசீலனை செய்வேன். ஆனால் அது நீங்கள் நினைக்கும் திசையில் இருக்க வாய்பில்லை.

இப்படி இருக்க தமிழச்சி ஆதரித்தால் அதனால் எனக்கு பெரிய பிரச்சனயில்லை. பல ஈழத்தமிழர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைகளை நியாயப்படுத்கின்றார்கள். பல பார்பனரல்லாதவர்கள் பார்பனியத்துக்கு ஆதரவாக பேசுகிறார்கள். பல தலித்கள் தலித்தியத்துக்கு எதிராக பேசுகிறார்கள். அட, பல ஏழைகள் பணக்காரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இதில் ஒரு பெண் தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக ஒரு ஆண் திமிரை ஆதரிப்பதை புரிந்து கொள்வதா மிக சிரமமானது?!

1/14/2010 2:39 AM  
Blogger NICHAAMAM said...

http://www.kalachuvadu.com/issue-121/page20.asp

1/17/2010 11:05 PM  
Blogger ROSAVASANTH said...

அன்பின் சுகன், சுட்டிக்கு நன்றி, வாசித்தேன்.

1/19/2010 3:53 AM  
Blogger வால்பையன் said...

@ சுகுணா திவாகர்

//பர்தா குறித்த பதிவொன்றில் ஒன்றுக்கும் ஆகாத ‘ஈரோடு பதிவர் சந்திப்பில் வடை மெனுவில் இருந்ததா இல்லையா’ என்கிற விஷயமே சர்வதேசப் பதிவர் எதிர்ப்புகளுக்கு உள்ளாகி அந்த பத்தியே நீக்கப்பட்டது.//

அந்த வாக்கியத்தில் உள்ள ”ஒன்றுக்கும் ஆகாத” எனும் வார்த்தை எதை குறிக்கிறது என தெரிந்து கொள்ளலாமா!?

1/29/2010 1:40 AM  
Blogger Kannan said...

Just now i came across this post. I saw those written in Leena's blog few week's back. If I remember correct;it was not written by her.She just published on her blog.

5/01/2010 9:24 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள கண்ணன், நீங்கள் சொல்வது எனக்கு சரியாக விளங்கவில்லை. தெளிவாகவும் ஊகிக்க முடியவில்லை. குறிப்பாக 'was not written by her' என்றும், 'She just published on her blog.' என்றும் எதை சொல்கிறீர்கள் என்று..

5/03/2010 2:53 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter