ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, March 15, 2010

திற - சாதக் ஹசன் மண்ட்டோ.

ராமானுஜம் மொழிபெயர்த்து வெளிவந்துள்ள சாதக் ஹசன் மண்ட்டோவின் முழுமையான தொகுப்பை இன்று எனக்கு அளித்து, அதில் 'திற' என்ற கதையை உடனே படிக்குமாறு நண்பர் பைத்தியக்காரன் கேட்டுகொண்டார். ஏற்கனவே அதை வாசித்திருந்ததை அறியாமல், மீண்டும் படிக்க தொடங்கினேன். வாசித்திருந்ததை அறிந்த பிறகும் மீண்டும் படித்தேன். கதைக்கு விமர்சனம் என்று எழுத எதுவுமில்லை - கதையை மீண்டும் எழுதி வாசிப்பதை தவிர. கீழே இருப்பது சுருக்கப்பட்ட என் விவரிப்பில் உள்ள கதை மட்டுமே.

பிரிவினைக்கு பிறகான கலவரங்களுக்கு இடையில், சிராஜூதீன் என்ற அந்த கிழவர், அம்ரித்சரில் இருந்து செல்லும் அந்த ரயிலில், கொலைகள் தாக்குதலுக்கு நடுவில் மயக்கமாக பயணிக்கிறார். முகல்புராவில் அகதிகள் கடல் போல் திரண்டிருந்த மைதானத்தில் விழிக்கிறார். அவரது சிந்தனைகள் மரத்து, மொத்த இருப்பும் சூன்யத்தில் இருந்தது. சூரிய கதிர்களின் ஊடுருவலில் திடீரென புலன்கள் விழித்து .. சூறையாடல்.. தீ... குடல் வெளியெடுக்கப்பட்டு கொல்லப்பட்ட மனைவி... மகள் ஷகினாவுடன் ஓடியது... விழுந்த அவளது துப்பாட்டாவை எடுக்க குனிந்தது... அதற்கு மேல் நினைவில்லை. அவருடைய கோட்டில் ஷகினாவின் துப்பட்டா இருந்தது. ஆனால் ஷகினா எங்கே?

சிராஜூதீனின் மண்டைக்குள் கேள்விகள் மட்டுமே இருந்தது. அவருக்கு அனுதாபம் தேவைப்பட்டது. ஆனல் அந்த கூட்டத்தில் எல்லோருக்கும் அனுதாபம்தான் தேவைப்பட்டது. அவர் கண்கள் வற்றி அழுவதற்கு கூட அவருக்கு உதவ மறுத்தது.

உதவ தயாராக இருந்த அந்த எட்டு இளைஞர்களிடம் ஷகினாவின் அடையாளங்களை சொல்கிறார். அவர்கள் உணர்ச்சி பெருக்கான வார்த்தைகளை சொல்லிவிட்டு, தேடுதலை தொடங்குகின்றனர். பத்து நாட்கள் கடந்தும் ஷகீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒருநாள் லாரியில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்கள் மிரண்டு ஓடும் ஷகினாவை காண்கிறார்கள். பயந்த அவளை தேற்றி உணவு, பால் கொடுத்து லாரியில் ஏற்றி அழைத்து செல்கிறார்கள். துப்பட்டா இல்லாத ஷகினா தன் மார்பை மீண்டும் மீண்டும் மறைக்கிறாள். இளைஞன் ஒருவன் தன் கோட்டை அவளுக்கு அளிக்கிறான்.

நாட்கள் கடந்தன. சிராஜூதீனுக்கு ஷகினா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அலைகிறார்; அந்த இளைஞர்கள் தேடுதலில் வெற்றி பெற பிரார்த்திக்கிறார். ஒருநாள் அவர்கள் லாரியில் உட்கார்ந்திருப்பதை கண்டு விசாரிக்கிறார்.

"வருவாள்..வருவாள்" லாரி நகர்கிறது. சிராஜூதீன் மீண்டும் பிரார்தனை செய்கிறார்.

ஒருநாள் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்ணை சிலர் தூக்கி சென்று மருத்துவமனை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு செல்வதை அறிகிறார். சற்று நேர யோசனைக்கு பிறகு மருத்துமனைக்குள் சென்று, ஸ்டிரெச்சரில் கிடந்த உயிரற்ற உடலை காண்கிறார்.

"ஷகினா!"

"என்ன வேண்டும்?" என்கிறார் டாக்டர்.

"ஐயா, நான் அவளை பெற்றவன்"

டாக்டர் நாடித்துடிப்பை பரிசோதித்து சிராஜூதீனிடம் ஜன்னலை திறக்க சொல்கிறார்.

"திற"

உடல் சில அசைவுகளை காட்டியது.

செயலற்று கிடந்த அதன் கைகள் இடுப்பில் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்தது.

பிறகு சல்வாரை கீழே இறக்கி விட்டது.

" உயிரோடு இருக்கிறாள்.. என் மகள் உயிரோடு இருக்கிறாள்"

டாக்டருக்கு வியர்த்து கொட்டியது.

(கலவரத்தையும், சமூக சேவையையும், இஸ்லாமிய இளைஞர்களை இவ்வாறு சித்தரித்ததற்காக, பின்னர் பாகிஸ்தானில் மண்ட்டோ வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.)

Post a Comment

7 Comments:

Blogger Raj Chandra said...

I too have read this story before (and felt I shouldn't have :( ).

Can you please provide the details about the tamil version of this collection (like who is the publisher)?

Thank you.

Raj

3/15/2010 9:43 AM  
Blogger ROSAVASANTH said...

மண்ட்டோ படைப்புகள் - சாதக் ஹசன் மண்ட்டோ.

தொகுப்பு-தமிழாக்கம் -ராமாநுஜம்.

நிழல் பதிப்பகம்.
nizhal_2001 at yahoo dot co dot in

Hope this helps.

3/15/2010 12:51 PM  
Blogger அருண்மொழிவர்மன் said...

அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள் வாசித்தேன். நன்றாகத்தான் இருந்ததுநிறைய விடயங்களில் அவர் கூர்மையாகவே கருத்துக்களி சொல்லி இருப்பதை அவதானித்தேன். அதிலும் அமெரிக்கா முஸ்லீம் தீவிரவாதத்தை வளர்த்து விடுவதன் பின்னலுள்ள அபாயங்கள் பற்றி அவர் சொன்னது இப்பொது நிதர்சனமாகி வருகின்றது

3/15/2010 1:07 PM  
Blogger chandru / RVC said...

’திற’ குறும்படமாகவும் எடுக்கப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்க விரும்புகிறேன். :)
சுட்டி : http://rvchandrasekar.blogspot.com/2009/12/blog-post_22.html

3/15/2010 1:59 PM  
Blogger ஹரன்பிரசன்னா said...

http://pratilipi.in/2009/03/open-it-saadat-hasan-manto/

3/15/2010 2:19 PM  
Blogger ஹைப்பர்லிங்க் சிந்தனைகள் said...

இந்த கதையை குறிப்பிட்ட அந்த தொகுப்பில் படித்திருக்கிறேன். அவரின் பெரும்பாலான கதைகள் அதிர்ச்சி மதிபீட்டை முன் வைத்து எழுதப்பட்டவை என்று நினைத்தாலும் ஒரு கால கட்டத்தை அதிலும் நம்மால் ஒரு சார்பாகவே நினைக்கப்படும் (வரலாறு அப்படிதானே கற்பிக்கபடுகிறது) ஒரு விஷயத்தை பொதுவாக எந்த சார்பும் இல்லாமல் முன் வைத்தவர் என்ற முறையில் அவரின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. பெரும்பாலும் ஜெயகாந்தனின் பாணியை கொண்டிருப்பவை என்று எண்ணத்தூண்டும் எழுத்து. நல்லவேளை மண்டோ நீர்த்து போகவில்லை....கடைசி வரையிலும்...

மண்டோ உருதுவில் எழுதியதாக சொல்லப்படுகிறது.. உருது மொழியின் சாத்தியங்களும் அதன் அழகும் மொழிபெயர்ப்பில் காணாமல் போயிருக்கலாம்

3/16/2010 2:06 AM  
Blogger Raj Chandra said...

Thank you for the book details and the publisher information.

Regards,
Raj

3/17/2010 11:02 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter