ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, June 30, 2005

வடிவங்கள்!



நாரா எனும் இடத்தில் உள்ள ஒரு அடுக்கு கோபுரம்.



நாராவில் உள்ள கனோனின்(அதாவது அன்பின் காளியாகி(அதாவது பெண்பால் கடவுளாகி)ப்போன புத்தரின்) ஆலயம்.






க்யோத்தோ ஹேயியான் (heian) ஷிண்டோ ஆலயம்.





கின்காகுஜி(ginkakuji) எனப்படும் ஜென் வனம். ஜப்பானிய மொழியில் gin என்றால் வெள்ளி. ஆனால் இந்த கோவில் வெள்ளியால் ஆனது அல்ல. பெயர் காரணம் எனக்கு தெரியாது. Kin என்றால் தங்கம். க்யோத்தோவில் kinkakuji எனப்படும் தங்கத்தாலேயே முழுவதுமான கோவிலை கொண்ட ஜென் வனமும் உள்ளது. அதன் புகைப்படம் விரைவில் வரும்.



க்யோத்தொ டவர்.

எல்லா மதத்தையும் 'ஒப்புகொள்ளும்' சகிப்பு தன்மையை ஜப்பானில் பார்க்க முடியும். (இந்துமதத்திலும் இது உண்டு என்றாலும், அதில் உள்ள பிரச்சனைகள், அதற்கு நேரெதிரான சாதியம், இவற்றை கணக்கில் கொள்ளாமல், முன்னதை மட்டும் முன்வைத்து விடப்படும் பீலாக்கள், புளுகுகள், மிகைப்படுத்தல்கள், கட்டமைத்தல்கள், இவற்றிற்கு நேரெதிராக இவற்றையெல்லாம் எதிர்த்து இந்த தன்மையையே நிராகரிக்கும் இந்துத்வ எதிர்பாளகள், இதையெல்லாம் கடந்து சார்புநிலையின்றி பார்க்கும் வேலையை இப்போது செய்யாமல், ஜப்பானிய் வாழ்க்கை குறித்து நான் சொல்வது வேறு என்று மட்டும் சொல்லிகொள்கிறேன்.) பல ஜப்பானிய திருமணங்கள் பகலில் கிருஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிகொண்டும், இரவு போய் ஷிண்டோ ஆலயத்திலும் நடப்பதை பார்க்க முடியும். ஷிண்டோ மதம் ஜப்பானின் தொன்மையான மதம். புத்த மதத்தின் வரவு அதை அழிக்கவில்லை. ஒவ்வொரு ஜப்பானியனும் 'ஷிண்டோவாய் பிறந்து, புத்தமதத்தவனாய்' இறப்பதாய் சொல்வதுண்டு. அதே நேரம் கிருஸ்தவ மதமும் வாழ்வில் கலந்திருப்பதையும் காணமுடியும். (ஜப்பானிய மதவாழ்க்கை எப்போதும் சகிப்பு தன்மையுடன் இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு காலகட்டத்தில் கிருஸ்தவர்களாய் மாறியவர்களை சிலுவையில் அறைந்த வரலாறும் உண்டு) ஆனால் கொள்கையளவில் இன்று அனைவரும் ஏற்றுகொண்டிருக்கும் மதம் கேபிடலிஸம்.

தீ மிகவும் பயனுள்ளது.அதன் பயன்கள் சொல்லி மாளாது. தீ அழகானது. அதை சாமர்த்தியமாய் பயன்படுத்த வேண்டும். அதனை வழிப்படலாம், விளையாடக்கூடாது. காட்டில் ஒரு பொந்தில் வைத்தாலும் கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பாய் அழகு பார்க்க வேண்டும். காடு வெந்து தணியும் வரை வேடிக்கை பார்க்க கூடாது. எல்லாம் சுபிட்சமாய் இருக்கும்.

Post a Comment

---------------------------------------

Tuesday, June 28, 2005

Icons and Iconoclasts!







"பிம்பங்களும், பிம்ப அழிப்பாளர்களும்" என்று குண்ட்ஸாய் யோசித்து தலைப்பிட இருந்தேன். ஆனால் எனக்கு சமதானமாகாமல் ஆங்கிலத்திலேயே இட்டிருக்கிறேன். icon என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இந்த இடத்தில் பொருந்துமாறு ஒரு தமிழ் சொல் எனக்கு தெரியவில்லை. இராம.கி ஐயா இதை பார்த்தால் பொருத்தமான சொல்லை தரக்கூடும். இல்லையெனில் நான் பிறகு கேட்டு எழுதுகிறேன். நண்பர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

(புத்தரின் புகைப்படம் ஜப்பானில் நாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் எடுக்கப்பட்டது.)

Post a Comment

---------------------------------------
கதார்!

என் பதிவுகளில் இன்று வரை படம் எதுவும் காட்டாததற்கு, நான் எழுத்திலேயே படம் காட்டுவது மட்டும் காரணம் அல்ல. படம் காட்டுவது எப்படி என்று தெரியாததுதான் முக்கிய காரணம். நேற்றுதான் மதி தமிழ்மண மன்றத்தில் அளித்த தகவலை வைத்து தெரிந்துகொண்டு அளிக்கும் முதல் முயற்சி இது. எழுதாத நேரத்தில் பெயரிலியை முன்னுதாரணமாய் வைத்து இப்படி படப்பதிவாவது போடுவதாய் இருக்கிறேன்.



மேலே இருப்பவர் PWGயின் புரட்சி பாடகர் கதார். (கூட இருப்பவரின் பெயர் என் அசிரத்தை மற்றும் பெயர்களை நினைவு வைத்துகொள்வதில் எனக்கிருக்கும் பலவீனம் காரணமாய் நினைவிலில்லை.) கதாரின் பாடல்களை கேஸட்டில் கேடிருக்கிறேன்.என் குறைந்த பட்ச தெலுங்கு அறிவில் அதை முழுமையாய் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கதாரின் பாடல்கள் நரம்புகளில் ஏற்றும் உணர்ச்சியை அனுபவித்திருக்கிறேன். மேலே தெரியும் அத்தனை பெரிய கூட்டத்துடன் பெரிய வெளியில் என்ன உணர்வினை தரும் என்று கற்பனை செய்ய முடிகிறது.




இரண்டு படங்களும் இணையத்திலிருந்து இறக்கி என் கணணியில் போட்டு பல காலமாகிறது. கதாரின் படம் இந்து பத்திரிகையிலிருந்தும், ராஜாவின் படம் ராகாகி படத்தொகுப்பிலிருந்து எடுத்ததாக நினைவு. அவர்களுக்கு அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி.

Post a Comment

---------------------------------------

Thursday, June 23, 2005

ஷங்கரின் 'அந்நியன்' பற்றி...

அந்நியன் திரைப்படம் 'பார்பனியத்தை' பிரச்சாரம் செய்வதாக இன்னும் யாரும் எழுதி கேள்விப் படவில்லை என்றாலும், அப்படி ஒரு ஸ்டிரியோடைப் குரல் தமிழ் சூழலில் ஒலிக்க எல்லா வாய்ப்பும் இருப்பதால் இந்த பதிவை எழுதவேண்டியுள்ளது.

அந்நியன் திரைப்படம் பிராமணர்களை பற்றி எடுக்கப்பட்டதல்ல. சொல்லப்போனால் அது அய்யங்கார்களை பற்றியது கூட அல்ல. அது எவரையும் பெருமைபடுத்தவும் இல்லை. எவரையும் இழிவுபடுத்தவுமில்லை. அதில் நொசிவாக, நொகையாக சித்திரிக்கப் படும், கருப்பான நிறத்துடன் உலாவரும், சமூக சீரழிவின் காரணிகளாக, சுய ஒழுக்கம் அற்றவர்களாக, நேர்மை யற்ற முறையில் வாழ்வதாக சித்தரிக்கப்படும் எந்த பாத்திரமும் பிராமணரல்லாதவரை குறிக்கவில்லை. தமிழில் வெளிவந்துள்ள சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இதை குறிப்பிடலாம். படத்தின் முக்கிய பாத்திரங்கள் மூன்று. அவற்றில் இரண்டு அம்பி என்ற பாத்திரத்தின் பிளவு பட்ட மற்ற ஆளுமைகளாக வந்தாலும், அவைகள் அம்பியின் சாதிய அடையாளத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்து கொண்டு, பொதுவான மனித பண்புகளின் அடையாளங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ரெமோ, அந்நியன் என்ற இரண்டு பாத்திரங்களும் பிராமண தமிழில் பேசுவதில்லை. ஸ்ரீசுவர்ணம் இட்டுகொள்வதும் இல்லை. சமுதாயத்தின் அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போகும், அநியாயங்களை தட்டி கேட்கும் தன் நேர்மை காரணமாகவும், அதன் விளைவாகவே காதலில் வெற்றி பெற முடியாத அம்பியின் கையாலாகாத்தனத்திற்கு வடிகாலாகாவே, அவனது ஆளுமை பிளக்கப் பட்டு ரெமோவாகவும், அந்நியனாகவும் உருவெடுக்கிறான்.

கல்மனசையும் உருக செய்யும் வகையில் அம்பியின் பாத்திரம் படைக்கபட்டிருக்கிறது. லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. சுத்தத்தையும் ஒழுக்கத்தையும் அம்பி பேணுவதை போல, சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் பேணாததையும் அவ்வாறு பேண வேண்டியதன் அவசியத்தையுமே அது வலியுறுத்துகிறது. சார்லி கருப்பு நிறத்தில் லுங்கி கட்டிகொண்டு, கலீஜ் சென்னை தமிழ் பேசுவதால் மட்டும் அது ஒரு பிற்படுத்த பட்டவரை குறிப்பதாக நாம் கொள்ள முடியாது. கருப்பு/சிவப்பு தோல்நிறங்கள், லுங்கி/வெள்ளை நிற உடை இவையனைத்தும் சுத்தம்/அசுத்தம் குறித்த குறியீடே தவிர, அது எந்த ஜாதியினரையும் குறிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் படத்தில் பிராமணர்கள் யாரும் இத்தகைய ஈனசெயல்களில் ஈடுபடாமல் ஒழுக்கமாகவும், செய்பவர்கள் அனைவருமே மற்ற ஜாதியினராக இருப்பதாகவும் சித்தரிக்கப் பட்டிருப்பதாக சிலருக்கு தோன்றக்கூடும். ஒரு கலைப்படைப்பை வாசிக்க தெரியாத முதிர்சியின்மையாக மட்டுமே இதை பார்க்க முடியும். பிராமணர்கள் சுத்தத்தை பேணுபவர்களாகவும், சாந்த சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பதாலேயே அவர்கள் அவ்வாறு குறியீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். குறியீட்டின் பொருத்தப்பாடு காரணமாகவே இவ்வாறு திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது.

மொழி மட்டுமில்லாது, கலை என்பதே ஒரு குறியீட்டு அமைப்பு (sign system) என்பதாக இன்று கலையியலாளர்கள் சொல்லி வருகிறார்கள். அது திரைப்படத்திற்கு மிகவும் பொருந்தும். ஒரு கலைப்பிரதியை புரிந்துகொள்ள அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்க வேண்டும். அந்த வகையில் அய்யங்கார், கருப்பு, லுங்கி இவையெல்லாம் வெறும் குறியீடுகள் மட்டுமே. அப்படி வாசிக்கும் போது திரைக்கதையில் வரும் அய்யங்கார்கள் என்பதாக குறிக்க படுபவர்களுக்கும், இன்று அய்யங்கார்களாக அறியபடுபவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புரிந்துகொள்ளலாம். அதே போல உருவத்தையும், பேச்சு வழக்கையும் மட்டும் கொண்டு அயோக்கியர்களாக சித்தரிக்க படும் மற்றவர்களை பிற்படுத்த/தாழ்த்தபட்ட அல்லது பிராமணர் அல்லாதவராகவோ முடிவுக்கு வருவது ஒரு கலைப்படைப்பை வாசிக்க தெரியாத அறியாமை மட்டுமே. நீதிகான போராட்டத்தின் குறியீடாகவே கருட புராணமும் குறிக்க படுகிறது.

தமிழகத்தின் சென்ற நூற்றாண்டின் திராவிட இயக்க அரசியலின் பிண்ணணியில், பிராமணர்களின் நிலையை முன்வைத்து மட்டும் இந்த கதையை பார்க்கமுடியாது. வறலாற்றை ஒற்றை பார்வையால் தனக்கு வசதியாக்கி கொண்டு, பிரதிகளை வாசிக்கும் முதிர்சியின்மை மட்டுமே இதில் வெளிபடுகிறது. மாறாக கடந்த 50 வருட அரசியல் சமுதாய நிகழ்வுகளில் நாம் இழந்து விட்ட ஒழுக்க மதிப்பீடுகள், நாணயம், சுத்தம் சுகாதாரம் நிறைந்த வாழ்க்கை முறை, இவற்றின் பிண்ணணியில் வைத்து இந்த கதையை வாசிக்க வேண்டும்.

சண்டை காட்சிகளிலும், விக்ரமின் உருவ மாற்றங்களிலும் சில லாஜிக்கல் பிழைகள் இருந்தாலும், தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக வைப்பதற்கு தகுதி பெற்றது இந்த திரைப்படம். இந்த படத்தின் சிறப்பை பிரமணர்(கள் என்ற அடையாளத்துடன் எழுதும்) வலைப்பதிவாளர்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படம் 'பார்பனியத்தை' பிரசாரம் செய்வதாக பேச தொடங்குவது "நல்ல கலைப்படைப்புகளை புரிந்துகொள்ளும் அறிவு பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. பிராமணரல்லாதவர்களுக்கு கிடையாது. அவர்கள் சாதியை சொல்லி ப்ளாக் மெயில் மட்டுமே செய்யக் கூடியவர்கள்" என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழி வகுக்கும். இது பிராமணரல்லாதவர்களுக்கு எந்த விதத்திலும் உதவக்கூடியதல்ல.

பின் குறிப்பு: இந்த பதிவை எழுத உதவியவை

1. முக்கியமாக ரவிக்குமாரின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' பற்றிய கட்டுரை.
2. அருண் வைத்தியநாதன் தொடங்கி, ஸ்ரீகாந்த் மீனாட்சி வரை ஒத்ததாக எழுதப்பட்ட சில விமர்சனங்கள்.

அவற்றிற்கு என் நன்றிகள்.

Post a Comment

---------------------------------------

Tuesday, June 21, 2005

கழுதைபுலி வாழுமிடத்தில் வாழ்வதனால் மீண்டும்!

இரண்டு வாரம் தமிழ் படிக்கும் வசதியில்லாமல் இப்போதுதான் மீண்டும் வர முடிந்தது. சிவக்குமார் சில புளுகுகளை முன்வைத்துள்ளதால் சிலவற்றை மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்தினால் மட்டும் இதை எழுதுகிறேன். யாரும் இதை படித்து துன்புறவோ, நேரத்தை விரயம் செய்யவோ அல்ல. மிகையான புளுகுகள் ஏதேனும் வந்தால் ஒழிய மீண்டும் இதை தொடரமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

1. சென்ற பதிவை எழுதியதன் ஒரே காரணம், நான் ஏதோ நிதானம் தவறி எழுதி நீக்கிவிட்டதாக சிவக்குமார் ஃபிலிம் காட்டியதால், அதற்கு மாறாக வெளிப்படையாக எனது நீக்கப்பட்ட கருத்தை பதிவு செய்வது மட்டுமே. தமிழில் வாசிக்கும் வசதி எனக்கு இருக்காது என்று நான் ராகாகியிலும், என் வலைப்பதிவிலும் அறிவித்த பின்னர், சிவக்குமாரின் ஃபிலிமை ஒரு நண்பரின் வீட்டில் பார்க்க நேர்ந்ததால் அந்த சூட்டோடு சென்ற பதிவை எழுதினேன்.

தொடர்ந்து அவர் சொல்வது போல் நான் நிதானம் தவறி எழுதி எதையும் இன்றுவரை நீக்கியது கிடையாது. இது குறித்து ஏற்கனவே அனுராகிற்கு எழுதிய பதிலில் குறிப்பிட்டுள்ளேன். எழுதி உள்ளிட்ட பின் எதையும் எடிட் செய்யும் வழக்கம் கூட எனக்கு கிடையாது.

சிவக்குமாரையும், வந்தியதேவனையும், ஈழத்தமிழர் குறித்து மிக பச்சையான இனவாத விஷத்தை கக்கிய காரணத்தால், கோபத்துடன் சில வசை வார்த்தைகளை சொல்லியிருக்கிறேன். அதை நீக்கவில்லை. அதை மீண்டும் எந்த இடத்திலும் சொல்லமுடியும். நேரடியாய் அவர்களின் முகத்தின் நேராகவும் அதைத்தான் சொல்லுவேன். மற்றபடி பூடகமாய் அவர் குறிப்பிடும் இன்னொரு விஷயம் டோண்டுவிற்கு நான் ஒருமுறை எழுதியது. அது குறித்து தனிப்பட்ட முறையில் டோண்டுவுடன் மின்னஞ்சலில் பேசிய பிறகு, சில காரணங்களை முன்னிட்டு, அவர் அனுமதியையும் ஆலோசனையையும் பெற்று, நான் எழுதியதையும் அவர் எழுதியதையும் அழித்துள்ளேன். அதில் எதுவும் நிதானமின்றி எழுதப்பட்டதல்ல. அந்த கருத்துக்களும், அதை அழித்ததன் அறிவிப்பும் ஒரு முழுநாள் என் வலைப்பதிவில் இருந்தது. என் பதிவை வழக்கமாய் படிக்கும் எல்லோரும் அதை படித்திருக்க கூடும்.

மற்றபடி "நிதானமில்லாமல் எழுதியவற்றை அழிப்பது என்று நான் எழுதியதைப் படித்ததும், இதுவரை வேறெங்குமே தான் எழுதியதை அழிக்காதது போலவும், என் வலைப்பதிவில் மட்டுமே அதைச் செய்ததாகவும் கற்பனையில் மிதந்து கொண்டு, " என்று சிவக்குமார் சொன்னதில் உண்மையில்லை. நான் எங்கேயும் அழித்ததில்லை. (அதாவது நிதானமின்றி எழுதி அழித்ததில்லை. வேறு காரணங்களுக்காக அழித்திருக்கிறேன்.)

2. அடுத்து சிவக்குமார் தனது வழக்கமான பாணியில், மிக தெளிவாக உண்மையை தெரிந்துகொண்டு பச்சையாக புளுகுவது திண்ணையில் நான் தடை செய்யப்பட்ட கதை குறித்து. என் எழுத்துக்களை ஒரு வரி விடாமல் தொடர்ந்து படிக்கும், அதிலிருந்து மேற்கோள் காட்டும் அவர், இது குறித்த அத்தனை விவரங்களையும் படித்திருப்பார் என்பது எனக்கு தெரியும். தெரிந்தே நடிப்புடன் நான் சொல்வதை திரிக்கிறார் என்பதும் எனக்கு தெரியும். மற்ற பலருக்கும் தெரியும்.

அவர் சொல்வது போல் "குறியை அறுக்க வேண்டும்", "பாஸ்டர்ட்" "நங்கநல்லூர் வரும்போது அவிழ்த்துக் காட்டுகிறேன்" என்பது போன்ற எந்த விஷயமும் நான் திண்ணையில் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் கிடையாது. அரவிந்தன் நீலகண்டன் மிக தெளிவாக, நேரடியாக சொன்ன அறிவியல் சம்பந்தமான சில புளுகுகள் பற்றிய மறுப்பு மட்டுமே அதில் உள்ளது. திண்ணையில் தடை செய்யப்பட்ட கட்டுரை பதிவுகளில் வெளியாகியுள்ளது. என் கட்டுரையை படித்து அதில் உள்ள வசவு வார்த்தைகளை கண்டு பிடித்து தருமாறு மீண்டும் மீண்டும் நான் வாசகர்களை அழைத்துள்ளேன். இப்போது மீண்டும் அழைக்கிறேன். தயவு செய்து என் பதிவுகள் கட்டுரையை படிக்கவும். இது தொடர்பான செய்திகளை பதிவுகள் விவாதகளத்தில் உள்ளன. இப்போது சுட்டி தரமுடியவில்லை.

இந்த விவகாரத்தில் சிவக்குமார் எழுதியுள்ளது பச்சையான பொய். அதுவும் முழுவிவரத்தையும் நன்கு அறிந்துகொண்டு சொல்லப்பட்ட பொய். இந்த விவகாரம் குறித்து விரிவாக ஒரு பதிவு பின்னர் எழுதுவேன்.

3. மற்றபடி நான் சொன்ன சில விஷயங்கள் திரிக்கப்பட்டாலும் நேரடியான புளுகு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நண்பர் சங்கரபாண்டி சொன்ன குற்றச்சாட்டையும், அதற்கு சிவக்குமாரின் எச்சரிக்கை குறித்தும் முன்னமே மின்னஞ்சல் மூலம் (மட்டும்) அறிந்துகொள்ள முடிந்தது. சிவக்குமார் சூச்சு என்ற பெயரில் எழுதியதாக தீவிரமாய் நம்ப சங்கரபாண்டிக்கு காரணங்கள் இருக்கலாம். அந்த நம்பிக்கையையும் மீறி அது தவறாக இருக்க வாய்புண்டு என்று நினைக்கிறேன். அது எப்படியிருந்தாலும் எனக்கு அப்படி நம்புவதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது. அதை சொல்லலாம் என்று வந்த போது விசிதா குறித்து சிவக்குமார் எழுதியதை படிக்க முடிந்தது. அடடா, நான் இதுவரை இவர் பற்றி சொன்ன கருத்தை எல்லாம் இதை விட வேறு எந்த விதத்தில் நிறுவ முடியும்? ஹிபாக்கரஸி என்பதன் உரைகல் இவர்தான்! அலுத்து போனாலும் சொல்லத்தான் வேண்டியுள்ளது. இப்படியும் வெட்கம் கெட்ட ஒரு உதாரணம் நிச்சயமாய் வேறு ஒன்று கிடைக்காது. ஆனாலும் நான் இது போன்ற குற்றச்சாட்டுகளை, தெளிவான ஆதாரம் இல்லாத போது, முன்வைப்பதை எதிர்க்கிறேன். இதை நான் ஏற்கனவே அனாதையின் பதிவில் சொல்லியுள்ளேன். சிவக்குமார் குறித்து நான் எழுதிய அத்தனையும் அவர் மற்றவர்கள் சொன்னதை/சில தகவல்களை/தர்கத்தை திரிப்பதையும், அவருடைய எழுத்தை முன்வைத்து மட்டுமே.

இந்த குற்றச்சாட்டை நான் எதிர்ப்பதற்கு காரணம் இது தவறாக இருப்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல. இதை முன்வைத்து விவாதத்தை கடத்திகொண்டு போய், தனக்கு சாதகமாய் பயன்படுத்திகொள்வது. இதை ஜெயமோகன் பல காலமாய் வெற்றிகரமாய் செய்து வருகிறார். இந்த முக்கியமான காரணத்திற்காகவே இது போன்ற குற்றசாட்டுக்களை நான் எதிர்க்கிறேன்.

4. இதற்கு மேல் வேறு எதையும் விளக்க அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இவரை பற்றி மேலே எழுத மாட்டேன் என்பது என் சுயவசதியை - தேவை என்று நான் நினைப்பதை- முன்னிட்ட ஒரு தீர்மானமே ஒழிய உறுதிமொழி அல்ல. வலைப்பதிவு உலகில் இவர் ஏதோ இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டது போல் தோற்ரமளிக்கலாம். இவரது ஈடுபாடு சமீப காலத்தியது, போலியானது என்பது இலக்கியத்தில் தீவிர ஆர்வம் உள்ள யாருக்கும் புரியும். வெறும் அச்சு பிச்சு கருத்துக்களை மட்டும் முன்வைத்துவிட்டு, 'ஆய்வு கட்டுரை எழுதியுள்ளாயா?' என்று மற்றவரை கேட்கும் இவர் கேள்வி கூட ஜெயமோகனிடன் கடன் வாங்கியது. இவர் போலியாய் உச்சரிக்கும் 'இன்ஷா அல்லாஹ்' கூட சொந்த சரக்கு கிடையாது. இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் இலக்கியத்தின் எதிரி இலக்கிய ஆர்வம் உள்ளவனாய் தோற்றமளிப்பதற்கு எதிராக மட்டுமே இதை சொல்லுகிறேன். இந்த விவகாரம் குறித்து மேலே எதுவும் சொல்லும் உத்தேசமில்லை. சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

Post a Comment

---------------------------------------

Sunday, June 05, 2005

கழுதைப்புலி வாழுமிடத்தில்...

சிவக்குமாரின் தளத்தில் நான் எழுதி நீக்கிய பின்னூட்டத்தை, அவர் மீண்டும் இட்டு முதன் முறையாய் நான் எழுதிய ஒன்றிற்கு நேரடியாய் 'பதில்' சொல்லியுள்ளார். வழக்கம் போல விஷயத்தை திரித்து நான் எழுதியதை தனக்கு சாதகமாய் பயன்படுத்தும் அற்பத்தனத்தில் ஈடுபடுள்ளதால், நான் ஏதோ நிதானமின்றி எழுதி நீக்கிவிட்டதை, அவர் கையும் களவுமாய் இட்டது போல் பேசுவதால் இதை பதியவேண்டிய கட்டாயமாகிறது.

அவர் தளத்தில் முதலில் நான் எழுதியது.


"மீண்டும் நன்றி பிகேயெஸ். இதைவிட விஷம் பொருந்திய, கயமைத்தனமான, பொய்யான, போலியான இன்னும் பல பல பரிமாணங்கள் கொண்ட எழுத்தை என் வாழ்வில் படித்ததில்லை. இதை பதிவாக தந்ததற்கு மிகவும் நன்றி. இனி உங்களை படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது என்று தோன்றுகிறது."

அதற்கு பின்னர் பின்னூட்டமாய் என் பதிவில் எழுதியது,

"சற்று முன்னர் சிவக்குமாரின் பதிவை படித்தேன். இன்னும் குமட்டல் நிற்கவில்லை. வீட்டில் துணைவியுடன் பேசவும், மகனுடன் கொஞ்சவும் கூட முடியவில்லை. உண்மையில் இதை மீண்டும் மீண்டும் சொல்ல மிக மிக போரடிக்கிறது. இப்படியும் ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? அடுத்தவர்கள் எழுதியதை முழுவதும் திரிப்பதில், அதை வேறாய் மாற்றி எழுதவும்.. இவர் செய்வதை விளக்க ஒரு சரியான வார்த்தை கூட என்னிடம் இல்லை. இப்படியும் கேவலமான ஒரு பிறவி இருக்க முடியுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் கூட சளைக்காமல் தொடர்ந்து இந்த மனிதர் இதை வருடக்கணக்கில் (நான் அறிந்து) செய்து வருகிறார். எனக்கு சிவக்குமார் பற்றி, இணையத்தில் அவர் எழுதியதை தவிர வேறு எதுவும் தெரியாது. ஒருவேளை அவர் சொந்த வாழ்க்கையில், வேலையில் நேர்மையானவராய் கூட இருக்கலாம். நண்பர்களுக்கு உண்மையாய் கூட இருக்கலாம். ஆனால் எழுத்தில்/தர்க்கத்தில் இப்படி ஒரு நேர்மையின்மை(வேறு வார்த்தை கிடைக்காததால் இதை நேர்மையின்மை என்று மட்டும் சொல்கிறேன்)யை காட்டும் மனிதனை எப்படி விளங்கி கொள்ள? எப்படி ஒரு மனிதனால் இப்படி ஒரு கேவலமான (எழுத்து) வாழ்க்கையை எந்த சஞ்சலமும் வெட்கமும் இல்லாமல் வாழ முடிகிறது. இதைவிட எந்தவித பிழைப்பும் மேலல்லவா? தூ!

உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புஷ், சோ, பால் தாக்கரே, ஹிட்லர், யூதர்கள் இவர்கள் எல்லாம் அப்படி இருபதை புரிந்துகொள்ள ஒரு தர்க்கம் என்னிடம் இருக்கிறது. இந்த மனிதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் எந்த மிகையும் நான் காட்டவில்லை. படித்து குமட்டல் தாங்காமல் அதிலிருந்து மீண்டு வரும் வடிகாலாய் இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இரண்டு வார பயணத்திற்கு புறப்படுகொண்டிருக்கிறேன். அந்த அவசரத்தில் இதை எழுதுவது தவிர்க்க முடியாத கட்டாயமாகிவிட்டது.
(இனி கொஞ்சம் இயல்பாய் வேலையில் இறக்க கூடும்.) "

இன்று நான் பார்த்த போது அவர் என் நீக்கப்பட்ட பின்னூட்டத்தை மீண்டும் இட்டு பதிலாக எழுதியிருந்தது,

"நன்றி ரோசா வசந்த்! "இதைவிடக் கயமைத்தனமான எழுத்தைப் படித்ததில்லை.", "உங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது." - இப்படியெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் வந்து வழக்கம்போல இந்தப் பழைய பல்லவியைப் பாடுவீர்கள் என்பது நான் அறிந்ததுதானே! சர்ச்சையைக் கிளறி வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கும், உருப்படியாக எதைப் பற்றியும் ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை எழுதுகிற திராணி இல்லாதவர்களுக்கும், தான் என்ன எழுதுகிறோம் என்கிற நிதானமே இல்லாமல் கண்டதையும் எழுதிப் பின் அதைத் தாங்களே அழித்துவிடுபவர்களுக்கும், எந்த ஒரு விஷயத்திலும் யாரையாவது திட்டியே பிழைப்பை ஓட்ட வேண்டும் - உருப்படியாகத் தாமாக எதைப் பற்றியும் தம் கருத்தைச் சொன்னால் தம்முடைய வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்று பயப்படுபவர்களுக்கும், இப்படியெல்லாம் அடுத்தவரைப் பற்றி "கயமைத்தனம், இனிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால்தான் பிழைப்பு ஓடும். அந்தப் பிழைப்பில் ஏன் மண்ணைப் போடுவானேன்?

அடுத்த முறையும் வந்து இதையே எழுதுங்கள். நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள். உங்களைப் போன்றவர்களுக்குத்தான் கோபத்தை அடக்கவும் நிதானமாக யோசிக்கவும் மாற்றுக் கருத்திருந்தாலும் சொல்லாமல் போகிற முதிர்ச்சியைப் பெறவும் எல்லாம் medidation வேண்டுமே. மெடிடேஷன் செய்யாமலேயே அவதூறுகளையும் அத்துமீறல்களையும் பொருட்படுத்தாமல் போகிற ஞானம் வாய்த்தவர்களைக் கண்டால்தான் உங்கள் ஈகோ அடிபட்டுப் படம் எடுத்து ஆடுமே! எனவே, ஆடுங்கள். நீங்கள் வருவீர்கள். வந்து எழுதுங்கள். இது தெரிந்த விஷயம்தானே. அப்புறம் எதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மாதிரி, "இனி உங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது" என்கிற வீரவசனம் எல்லாம்? என்னை மட்டும் திட்டுகிற வரை உங்கள் கருத்துகள் நீக்கப்பட மாட்டா. எனவே, மெடிடேஷன் செய்யாமல், சட்ட நடவடிக்கை எடுக்காமல், நான் எழுதியதை நானே "often" அழிக்காமல், அத்துமீறுவதும் அவதூறு செய்வதும்தான் கருத்துச் சுதந்திரம் என்று முனையாமல், இப்படிப்பட்ட அவதூறுகளைகளையும் அத்துமீறல்களையும் எதிர்கொள்கிற பக்குவம் எனக்கு அதிகமாகவே உண்டு"

அதற்கு கீழே நான் எழுதியது,

"//தான் என்ன எழுதுகிறோம் என்கிற நிதானமே இல்லாமல் கண்டதையும் எழுதிப் பின் அதைத் தாங்களே அழித்துவிடுபவர்களுக்கும்,//

சிவக்குமார் சொல்வது உண்மையல்ல. நான் அழித்ததற்கு காரணம் நிதானமின்றி எழுதியதனால் அல்ல. இங்கே எழுதியதை என் தளத்தில் (பின்னூட்டமாய்)பதிவு செய்திருக்கிறேன். அதனால் சிவக்குமார் சொல்வது போல் அதை மறைக்கவோ அழிக்கவோ எனக்கு காரணம் இல்லை. சிவக்குமார் எழுதியதை படித்ததும், அது குறித்து எழுதியதும், என்னுள் ஏற்படுத்திய குமட்டலின் காரணமாய், இங்கே எழுதும் விருப்பமின்மை காரணமாய் இதை நீக்கினேன். அதை மீண்டும் இட்டது அநாகரிகம் ஆயினும் அதனால் பிரச்சனை இல்லை.

மற்றபடி சிவக்குமார் என்னை பற்றி சொன்ன கருத்துக்களுக்கு நன்றிதான் தெரிவிக்க வேண்டும். நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் இந்த உலகில் நேர்மையின்மையின் உரைகல்லாக நினைக்கும் அவர் என்னை பற்றி சொன்ன அத்தனையையும் பாராட்டாக மட்டுமே எடுத்துகொள்ள முடியும். அவர் என்னை ஒரு முறை பாராட்டியபோது (அதன் பிண்ணணி என்னவாக இருந்தாலும்) மட்டுமே கலக்கம் வந்தது. அதனால் அவரின் நல்ல வார்த்தைளுக்கு நன்றி. அவர் சொன்ன விஷயங்கள் அவருக்கு பொருந்துமா எனக்கு பொருந்துமா எனபது சுயமாய் சுதந்திரமாய் சிந்திக்கும் அனைவருக்கும் புரியும். அப்படியில்லாதவர்கள் குறித்து கவலைப்பட ஏதுமில்லை."

அசோகமித்திரன் மனம் திறந்ததாய் அவுட் லுக்கில் வந்ததை (அதில் திரித்தல் இருக்கும் பட்சத்தில்) மறுப்பது அவரது வேலை மேலும் கடமை, அல்லது அவர் சார்பாய் வேறு ஒருவர் அதை செய்யலாம். ஆனால் அதை அவர் (நேரடியாய் நேர்மையாய்) மறுக்காத வரை, அதை முன்வைத்துதான் மற்றவர்கள் பேசமுடியும். அவ்வாறு பேசிவர்களை "பாம்பைவிடவும் விஷமானவர்கள். " என்றெல்லாம் சிவக்குமார் திரித்தார். அசோகமித்திரனின் பேட்டி வந்ததும் அதை முன்வைத்து அருளும், வெங்கட்டும் எழுதியிருந்தார்கள். இருவருமே அசோகமித்திரனின் இலக்கிய பங்களிப்பை, இந்த பேட்டிக்கு பிறகும் நிராகரிக்கவில்லை. நான் வாயையே திறக்கவில்லை. தங்கமணியின் சொதப்பலான பதிவு, மற்றும் வந்த பின்னூட்டங்களை முன்வைத்தே நான் எழுதினேன். அதிலும், அதற்கு பின் பின்னூட்டத்திலும் தெளிவாக அசோகமித்திரனின் இலக்கிய பங்களிப்பை வாசிக்காமல் புறக்கணிக்க முடியாது என்றும், அதற்கு காரணமும் சொல்லியுள்ளேன். அதற்கு பின்னர் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக "அவர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதும், அவர்களைத் தமிழின விரோதிகளாகச் சித்தரிப்பதுமான அநியாயங்கள் தமிழில் மட்டுமே நடைபெறும். " என்று இந்த நபர் திரிக்கிறார். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சங்கரபாண்டியுடன் திண்ணையில் இவர் போட்ட சண்டையில், மீண்டும் மீண்டும் "நேரு பண்டிட் பட்டத்திற்கு தகுதியானவர் என்று நிறுவமுடியும்' என்று உதார் (மட்டும்)விட்டவர். நான் அது வெறும் சாதிப்பட்டம் மட்டுமே என்று சுட்டிகாட்டியதும், மௌனமானது மட்டுமின்றி அது குறித்து எங்கேயும் எதிர்கொண்டது கிடையாது. மாறாக தான் 'ஜாதி வெறியன்' என்று திட்டப்பட்டதாக பின்னர் திரித்தார். சிவக்குமாரின் திரித்தல்களை அடுக்குவது இங்கே சாத்தியமில்லை. புதிதாய் படிக்கும் நபர் நான் ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதாய் நினைக்க கூடாது என்பதனால் மட்டுமே இதை குறிப்பிடுகிறேன். எதிராளி பலவீனமானவனாய் இருந்தால் அல்லது பலவீனப்படும் போது எல்லாவகையிலும் தாக்குவது (அதையும் கூட திரித்து தன்னை யோக்கியமாய் காட்டிகொள்வது -பார்க்க சங்கரபாண்டி பற்றி அவர் எழுதியுள்லது), பிரச்சனை வரும்போது மூச்சுவிடாமல் மௌனமாகி ஒளிந்துகொள்வது என்ற அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். தான் கையும் களவுமாய் பிடிபட்ட விஷயங்களை பற்றி பேசாததை "அவதூறுகளையும் அத்துமீறல்களையும் பொருட்படுத்தாமல் போகிற ஞானம் வாய்த்த"தாக அவரே பெருமையடித்து கொள்கிறார்.

ஜெயகாந்தனை பற்றி பேசினால், பேசுபவரை விடுதலை புலிகளுடன் சம்பந்த படுத்துவார்.என் விஷயத்தில் அதுவும் முடியாது. நான் மிக வெளிப்படையாய் புலிகளை விமர்சிப்பவன் மற்றும் எதிர்பாளன். நண்பரான தங்கமணியுடன் வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் தீவிரமாய் இந்த விஷயத்தில் சண்டை போடுபவன். அவர் தொடக்கூடிய பலவீனமான அம்சம் எதுவும் என்னிடம் கிடையாது. மேலும் அசோகமித்திரனை இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் குறித்தே அவரை விட எனக்கு ஆழமான பரிச்சயம் இருக்க வாய்புண்டு. எனக்கு சுட்டி கொடுக்க வேண்டிய அவசியம் கூட வராது, நேரடியாய் எழுத முடியும். அதனால் என் நீக்கப்பட்ட ஒரு பின்னூட்டத்தை வைத்து பிலிம் காட்டுகிறார்.


சிவக்குமாரரை முன்வைத்து நான் எழுதியவைகளை மிகைப்படுத்தப்பட்டதாக பலர் நினைக்கலாம். சில நண்பர்களும் கூட நினைக்கலாம். ஆனால் அது நான் ஈகோ உணர்சிகளை மீறி அவர் எழுத்தில் கண்ட ஒன்றை சொல்வதாக நினைக்கிறேன். அதை ஏற்றுகொள்ளதவர்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதன் ஒரு உண்மை பரிமாணத்தையாவது காணக்கூடும் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் கருத்து அதைவிட முக்கியமாய அவரது தர்க்கத்தை தவிர வெறுக்க அவரிடம் என்க்கு நிச்சயமாய் எதுவும் இல்லை.


ஆனாலும் சிவக்குமார் எழுதியதில் ஒரு உண்மையுண்டு. நேர்மையின்மையும், திரித்தல்களையும் பார்த்தால் அதை நிதானமாக அணுகும் பக்குவம் எனக்கு இல்லைதான். அப்படி ஒரு பக்குவத்தை அடைய முயற்சிக்கிறேன். இத்தனை தகிடுதத்தங்களை மிக அமைதியாக, எந்த குத்தல் குடைசல் இல்லாமல் அவர் செய்வது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. அதை வியந்துமிருக்கிறேன். இப்போதும் வியக்கிறேன். அடுத்து அவர் நான் எதுவும் உருப்படியாய் எழுதவில்லை என்றதும் உண்மைதான். இதுவரை எழுதியதில் 90விழுக்காடு மேலே சொன்ன காரணத்தினால் எழுதப்பட்டதுதான். ஆனால் உருப்படியாயயெழுத முடியும் என்பதற்கான தடையங்களாய் பல இடங்களிலும், உருப்படியாய் சில இடங்களிலும் எழுதியிருக்கிறேன். உருப்படியாய் எழுதுவதை காலம் நிச்சயம் தீர்மானிக்கும். சிவக்குமார் போன்றவர்களின் எழுத்துக்களை படிக்காமல் உருப்படியான வேலைகளில் ஈடுபடும் ஆசையும் நோக்கமும்தான் எனக்கும் உண்டு. ஆனால் அவரே கிண்டலடிப்பது போல் அது முடிவதில்லை. என்ன செய்வது கழுதைப்புலி வாழுமிடத்தில் அதை எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாது போய்விடுகிறது. (பெயரிலிக்கு நன்றி.)

அசோகமித்திரன் விஷயம் குறித்தும் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன். தான் மனம் திறந்ததாக வந்ததில் எதையெல்லாம் அவர் மறுக்கிறார் என்பது இன்னும் தெளிவில்லை. அசோகமித்திரன் இலக்கிய எழுத்தில் ஒரு வரி படித்திருக்காதவர்கள் பலர் கூட அவரது பார்பனியமயமான 'பேட்டியை' தலை மேல் வைத்து கொண்டாடினார்கள். அசோகமித்திரன் சொன்ன ஒரே காரணத்தால் அது முக்கியமானதும் ஆகியது. அவர் அதை அளிக்கவில்லையெனில், அதை மறுக்காமல் இருந்ததே கூட ஒரு குற்றம்தான். அதையும் முதிர்ச்சி என்பது போன்ற அபத்தம் எதுவும் இல்லை. இது குறித்தும் திரும்பி வந்ததும் எழுதுகிறேன்.

என் (இப்போதய) வேலையிடத்தில் தமிழ் எழுத்துக்கள் தெரிவதில்லை. ஒரு நண்பரின் தயவால் விண்டோஸ் XPயில் தமிழில் இப்போது எழுதவும் படிக்கவும் முடிகிறது. மீண்டும் இப்படிப்பட்ட வந்தால் ஒழிய தமிழ் பதிவுகளை படிக்கவோ, எழுதவோ முடியாது. இது ஒரு அவசர பதிவு மட்டுமே!

Post a Comment

---------------------------------------
Site Meter