ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, May 25, 2006

துப்புரவு தொழில்.

( பிரச்சனையை தொடர்ந்து விவாதத்தின் நினைவில் இருத்தி வைக்கும் நோக்கத்துடன், 'இந்தியா நாற்றமடிக்கிறது' புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே பதிவதன் அடுத்த பகுதியாக, புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலிருந்து இங்கே அளிக்கிறேன். )

தொடர்புடைய முந்தய பதிவுகள்,

நாறும் பாரதம்!

நாறுவது மனம்!

'நாறுவது மனம்'- பின்னூட்டங்களுக்கு பதில்

முன்னுரையிலிருந்து...

செய்தியல்ல!


துப்புரவு தொழில்.


இரவு சாப்பிட உட்கார்ந்த பின், எண்ணங்கள் அன்றய வேலையை அசை போடத்துவங்கும். ஒரு கவளத்தை கூட முழுங்க இயலாது. சில நாட்கள் இந்த வேலைக்கு போகாமல் இருந்து பார்த்தேன். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? குடும்பத்தை கவனித்து கொள்ள என் கணவர் எதுவும் செய்யவில்லை. நாங்கள் சாப்பாட்டிற்கே எப்போதும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.


-- கமலா, ஹைதராபாத்

மற்றவர்கள் சுத்தமாக தோற்றமளிப்பதற்காக நாங்கள் எங்களை அசிங்கப்படுத்தி கொள்கிறேம்.

--- கொட்டம்மா, சிராலா.



இந்தியாவில் துப்புரவு தொழில் என்பது, வீடுகளிலும் பொதுத்துறை நிர்வாகத்தால் நிர்வகிக்கப் படும் கழிப்பறைகளிலும், மனித மலத்தை கைகளால் எடுத்து அப்புறப் படுத்துவதாகும். இரண்டு வழிகளில் இந்த துப்புரவு தொழில் மேற்கொள்ளப் படுகிறது. முதலாவது, கல்லின் மீதோ, தட்டின் மீதோ, மண்தரையின் மீதோ, வாளியிலோ, எடுப்பு கக்கூஸ்களில் மலம் இடப்படுகிறது. அங்கிருந்து அது கொட்டப் படும் இடத்திற்கு துப்புரவு தொழிலாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இரண்டாவது, தனி வீடுகளிலும், நகராட்சிகளிலும் மலக்குழி மற்றும் சாக்கடைகளை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட வீடுகளின் மலக்குழிகள் சமூகத்தின் கண்ணில் புலப்படாத வகையில் சுத்தம் செய்யப்படுபோது, மனிதர்கள் பாதாளச் சாக்கடைகளின் மூடியை திறந்து கீழிறங்கி சுத்தம் செய்வது, நாம் அன்றாடம் காணும் ஒரு காட்சியாய் இருக்கிறது.

இத்தகைய துப்புரவு தொழில் ஒரு சம்பிரதாய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் 1993இல் தடை செய்யப் பட்டுள்ளது. அது 'துப்புரவு தொழிலாளர்கள் பணி நியமனம், எடுப்பு கழிவறை கட்டுமானம் தடை சட்டம்' என்று அழைக்கப் படுகிறது. எடுப்பு கழிவறையை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதுடன், தண்டனைக்கும் அபராதத்திற்கும் உரியது. என்றாலும் இந்திய அரசாங்கத்தின், Ministry of Social Justice and Empowerment தரும், 2002-2003 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள், இந்த நாட்டில் 6.76 லட்சம் துப்புரவு தொழிலாளர்கள், 96 லட்சம் எடுப்பு கழிவறைகளில் வேலை செய்வதை வெளிப்படுத்துகிறது. ஆந்திராவில் மட்டும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் எடுப்பு கழிவறைகள் , உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்க பட்டு வருகிறது.
(தொடரும்)

Post a Comment

5 Comments:

Blogger Muthu said...

இதை தடை செய்து சட்டம் உள்ளதா? இன்றுதான் எனக்கு தெரியும்.ஆனால் இன்னும் இது தொடருவதை அரசாங்கம் எப்படி நியாயப்படுத்துகிறது?

5/25/2006 5:42 PM  
Blogger நியோ / neo said...

In the Governor's Speech, the DMK govt. has assured that it would bring in a full fledged legislation to ban all kinds of Manual labour (in the disgusting Scavenging labor - both literally and as figure of speech sense ) in TN.

Lets hope tha nation follows suit soon.

5/25/2006 6:56 PM  
Blogger ROSAVASANTH said...

முத்து, நியோ, சட்டம் கொண்டு வருவது ஒரு பிரச்சனையே இல்லை, நடைமுறை படுத்துவதுதான் பிரச்சனை.

அரசாங்கம் தனது சட்டம் பின்பற்றபடவில்லை, தண்டனைக்குரிய குற்றம் என்பதாக சட்டத்தில் உள்ள ஒரு விஷயம், என்பது பற்றி தானே தனது அமைச்சகம் மூலம் புள்ளி விவரம் தருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

சமூகம் என்ன வகை நெருக்கடிகளை (ஓட்டுரீதியாக கூட) கொடுக்கிறது என்பதை பொறுத்தே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையும் என்று நினைக்கிறேன். இடவொதுக்கீடு ஒரு நேரடி உதாரணம். ஆகையால் நாம் சட்டத்தை பற்றி பேசாமல் அரசாங்கத்திற்கு தரவேண்டிய நெருக்கடிகள் பற்றி பேசவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

5/25/2006 7:28 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

நான் முன்பு வெங்கட்டின் பதிவில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன். ( பதில் கண்ணில் விழவில்லை) சென்னையில் நான் பார்த்தவகையில் இத்தொழிலை செய்பவர்கள் தெலுங்கு பேசுவார்கள். ஆந்திர நண்பர், ஆந்திராவில் தமிழர்கள் இத்தொழில் செய்கிறார்கள் என்றார். இது சரியான தகவலா? தமிழ் பேசும் பிரிவு, தமிழ் நாட்டில் இத்தொழில் செய்வதில்லை?
வசந்த், புத்தகத்தில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா?

5/25/2006 7:40 PM  
Blogger ROSAVASANTH said...

உஷா, தமிழகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தெலுங்கு பேசுவது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆந்திராவில் துப்புரவு தொழிலாளர்கள் தமிழ் பேசுவதாக எனக்கு தோன்றவில்லை -அது குறித்து நேரடி அனுபவம், தகவல் என்னிடம் இல்லை எனினும். புத்தகத்தில் என் வாசிப்பில் அப்படி ஒரு தகவல் கிடைக்கவில்லை. கிடைத்தால் அளிக்கிறேன்.

5/25/2006 8:11 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter